azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 08 Mar 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 08 Mar 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

Every person considered themselves as the child of immortality. The removal of immorality is the way to attain immortality. Injustice, impropriety, and inequity are weaknesses that must be got rid of. Control of the senses helps us to get rid of all evil tendencies. When your mind is troubled by bad thoughts, try to sit in a place and think of God, then you will be happy. Several great saints have taught the path of acquiring control over your senses. They used to offer to God all the tendencies that arise from the senses. They used to dedicate all their actions to God because they could divert their senses in the right channel. Their senses were not touched by temptations of sins. When you do any action just to please God, no evil result will flow out and cause you any suffering. What is offered to God is totally free from all defects and imperfections. (Ch 17, Summer Showers in Brindavan, 1972)
LOVE ALONE CAN CONFER IMMORTALITY. - BABA
ஒவ்வொரு மனிதனும் தங்களையே அமரத்துவத்தின் குழந்தையாகக் கருதினார்கள். ஒழுக்கக்கேட்டை நீக்குவதே அமரத்துவத்தை அடைவதற்கான வழியாகும். அநீதி, அநியாயம் மற்றும் சமத்துவமின்மை ஆகியவையே நீக்கப்பட வேண்டிய பலவீனங்களாகும். புலன்களை கட்டுப்படுத்துவது, அனைத்து தீய மனப்பாங்குகளையும் விட்டொழிப்பதற்கு நமக்கு உதவுகிறது. உங்கள் மனம் தீய சிந்தனைகளால் பாதிக்கப்படும் போது, ஒரு இடத்தில் அமர்ந்து இறைவனை தியானிக்க முயலுங்கள்; பின்னர், நீங்கள் சந்தோஷமடைவீர்கள். பல மாமுனிவர்கள், உங்களது புலன்களின் மீது ஆளுமை பெறுவதற்கான வழியை போதித்துள்ளார்கள். புலன்களிலிருந்து எழும் அனைத்து உந்துதல்களையும் அவர்கள் இறைவனுக்கு அர்ப்பணித்து வந்தார்கள். அவர்கள் தங்களது அனைத்து செயல்களையும் இறைவனுக்கு அர்ப்பணிக்க முடிந்தது ஏனெனில், அவர்களது புலன்களை சரியான பாதையில் அவர்களால் திருப்ப முடிந்தது. அவர்களது புலன்கள், பாவங்களின் வசீகரங்களால் தீண்டப்படவில்லை. எப்போது, நீங்கள் எந்தச் செயலையும் இறைவனைத் திருப்திப் படுத்துவதற்காகவே செய்கிறீர்களோ, எந்தத் தீய விளைவும் வந்து, உங்களுக்குத் துன்பம் ஏற்படுத்தாது. இறைவனுக்கு அர்ப்பணிக்கப்படும் எதுவும் அனைத்துக் குறைபாடுகளிலிருந்தும் முழுமையாக விடுபட்டதாக இருக்கும்.
ப்ரேமை மட்டுமே அமரத்துவத்தை அளிக்க முடியும் - பாபா