azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 03 Mar 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 03 Mar 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

Many students pray, “If I pass with a first class, I’ll break five coconuts at Your feet.” Does this mean God does not have coconuts at His disposal? All objects we offer, like leaf, flower, water, etc., have an allegorical significance. The word narikela stands for a coconut. Every Indian must grasp the inner meaning of offering a coconut to God. We never offer the coconut as it is. We remove the fibre that covers it and offer the fruit that is free from all the external fibre. Only then is it possible to break the coconut. By breaking the coconut, the water in it flows out. The heart is the coconut and it is covered by the fibre of desire. The water that flows out is the samskara or purification. The fibres on the surface are the desires. We must strip the heart of all desires and offer the core without the fibre. It then becomes an offering to God. (Ch 17, Summer Showers in Brindavan, 1972)
PEOPLE MAKE ALL KINDS OF OFFERINGS TO GOD.
BUT THE GREATEST OF THEM ALL IS TO OFFER ONESELF. - BABA
பல மாணவர்கள், " நான் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றால், உன் பாதத்தில் ஐந்து தேங்காய்களை உடைக்கிறேன்" என்று பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள். இதன் பொருள் இறைவனிடம் தேங்காய்களே இல்லை என்பதா? நாம் அர்ப்பணிக்கும் இலை, பூ, நீர் போன்றவைகளுக்கு ஒரு உருவக முக்கியத்துவம் இருக்கிறது. நாரிகேளா என்ற வார்த்தை தேங்காயைக் குறிக்கிறது. ஒவ்வொரு இந்தியனும், ஒரு தேங்காயை இறைவனுக்கு அர்ப்பணிப்பதன் உட்கருத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் தேங்காயை ஒருபோதும் அப்படியே அர்ப்பணிப்பது இல்லை. அதை மூடி இருக்கும் மட்டையை நாம் உரித்து விட்டு, வெளிப்புற மட்டை எதுவும் இல்லாத தேங்காயை அர்ப்பணிக்கிறோம். அதன் பிறகு மட்டுமே தேங்காயை உடைக்க முடியும். தேங்காயை உடைத்தவுடன் அதில் உள்ள இளநீர் வெளியே வழிகிறது. இதயமே தேங்காய் மேலும் அது ஆசைகள் என்ற மட்டையால் மூடப்பட்டு இருக்கிறது. வெளியே ஓடி வரும் இளநீரே ஸம்ஸ்கார அல்லது பரிசுத்தமாக்குதல். மேலே இருக்கும் மட்டையே ஆசைகள். நாம் இதயத்திலிருந்து அனைத்து ஆசைகளையும் உரித்து நீக்கி விட்டு, நார்கள் அற்ற உட்கருவை அர்ப்பணிக்க வேண்டும். அதன் பிறகு, அது இறைவனுக்கு உரித்த ஒரு அர்ப்பணிப்பாக ஆகி விடுகிறது.
மனிதர்கள் பல விதமான அர்ப்பணிப்புக்களை இறைவனுக்கு அளிக்கிறார்கள்.ஆனால்,அவற்றில் எல்லாம் மிகச் சிறந்தது ஒருவர் தன்னையே அர்ப்பணிப்பதுதான் - பாபா