azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 28 Feb 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 28 Feb 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

Not only in India but in several parts of the world, people are getting interested in the knowledge and practice of yoga. Though there are many schools of yoga, the most significant is Patanjali Yoga. Patanjali defines yoga as the regulation and control of the tendencies of the mind. Without controlling the senses, we cannot attain happiness in any walk of life or in any endeavour. If we just let go of our senses in a wild fashion, the result will be sorrow and joy. Today people are not paying proper attention to the control of their senses. Some people are under the misapprehension that they miss the very essence of life if they control their senses and deny themselves the pleasures of the senses. This is a mistaken idea. We should not think that we are restraining the senses from performing their functions. The real significance of this process is that we are directing and regulating them along the proper channels. Then we shall be able to enjoy the real delight of the mind and real pleasure of the spirit! (Ch 17, Summer Showers in Brindavan, 1972)
AN UNCONTROLLED MIND IS MAN’S ENEMY NUMBER ONE. - BABA
இந்தியாவில் மட்டும் அல்லாமல், உலகின் பல பாகங்களிலும், மக்கள் யோகாப்யாசத்தைப் பற்றிய அறிவு மற்றும் அதைப் பயிலும் முறை ஆகியவற்றில் ஆர்வம் அடைந்து கொண்டு வருகிறார்கள். பல விதமான யோக முறைகள் இருந்தாலும், மிகவும் முக்கியத்துவமானது பதஞ்ஜலி யோகாவே. மனப்பாங்குகளை வரையறுத்துக் கட்டுப்படுத்துவதே யோகா என பதஞ்ஜலி வர்ணிக்கிறார். புலன்களைக் கட்டுப்படுத்தாமல், நாம் வாழ்க்கையின் எந்தத் துறையிலோ அல்லது எந்த முயற்சியிலோ மகிழ்ச்சி அடைய முடியாது. நாம் நமது புலன்களை தலை தெறிக்க விட்டுவிட்டால், துக்கமும், சந்தோஷமுமே விளையும். இன்று மனிதர்கள் அவர்களது புலன்களைக் கட்டுப்படுத்துவத்தைப் பற்றி முறையான கவனம் செலுத்துவதில்லை. சிலர் தங்களது புலன்களைக் கட்டுப்படுத்தினால் வாழ்க்கையின் சாரத்தையே இழந்து, தமக்குத் தாமே புலன்களின் இன்பத்தைத் தவிர்த்து விடுகிறோம் என்ற தவறான புரிதலில் இருக்கிறார்கள். இது தவறான கருத்தாகும். புலன்கள் அவைகளின் கடமையைச் செய்வதிலிருந்து நாம் தடுக்கிறோம் என்று நாம் நினைக்கக் கூடாது. இந்த செயல்முறையின் உண்மையான முக்கியத்துவம் என்னவென்றால், அவற்றை சரியான வழிகளில் இயக்கி ஒழுங்குபடுத்துகிறோம் என்பதே ஆகும். பின்னர் நாம் உண்மையான மனக்களிப்பையும், உண்மையான ஆத்ம சுகத்தையும் அனுபவித்து மகிழ முடியும்!
ஒரு கட்டுக்கடங்காத மனமே மனிதனின் முதல் எதிரி - பாபா