azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 25 Feb 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 25 Feb 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

The cause for all troubles, confusion and turmoil is the fact that we have lost mastery over our senses. By leaving senses unfettered and unregulated, we will not be able to discriminate properly, and think coolly, calmly and rationally. Thus many times we are misled into wrong actions. In our daily lives, we know that when we become angry, our nerves become weak and feeble, and we lose grip over ourselves. Even a moment of anger takes away our strength we gather by eating good food for three months. Anger not only debilitates us, it takes away merit of our good deeds, and also enfeebles our condition. Anger is like an intoxicant. Internally, it induces us to do wrong things. Anger leads us to commit all other sins. This is the source of all sins. It is a great demon. If we are able to control anger, we shall be in a position to attain merit through the utterance of Lord’s Name. (Ch 17, Summer Showers in Brindavan 1972)
AN UNCONTROLLED MIND IS MAN’S ENEMY NUMBER ONE. - BABA
அனைத்து பிரச்சினைகள் , குழப்பங்கள் மற்றும் கொந்தளிப்புக்களுக்கு , நாம் நமது புலன்களின் மீதுள்ள ஆளுமையை இழந்து விட்டதே காரணம் ஆகும். புலன்களை தடங்களின்றியும்,கட்டுப்படுத்தாமலும் விட்டு விட்டால் ,நம்மால் சரியாகச் சீர்தூக்கிப் பார்க்கவோ ,கலங்காமலும் ,அமைதியாகவும் , பகுத்தறிவுடனும் சிந்திக்கவோ முடியாது .இதனால் பல முறை நாம் தவறான செயல்களுக்கு இட்டுச் செல்லப்படுகிறோம் .அன்றாட வாழ்க்கையில் நாம் கோபப்படும்போது, நமது நரம்புகள் தளர்ந்து , பலவீனம் அடைந்து , நாம் நம் மீது உள்ள பிடியை நாமே இழந்து விடுகிறோம் என்பதை நாம் அறிவோம் .ஒரு கண நேரக் கோபம் கூட நாம் மூன்று மாதங்கள் உணவு உண்பதால் பெரும் நமது சக்தியை எடுத்துச் சென்று விடுகிறது .கோபம் நம்மை வலுவிழக்கச் செய்வதோடு மட்டும் அல்லாமல் , நமது நற்கருமங்களின் புண்ணியத்தை நீக்கி விடுகிறது , மேலும் நமது நிலைமையைத் தாழ்த்தி விடுகிறது .கோபம் ஒரு போதைப்பொருள் போன்றதாகும் . உள்ளூர அது நம்மைத் தவறான செயல்களைச் செய்யத் தூண்டுகிறது . கோபம் நம்மை அனைத்து விதமான பாவங்களையும் செய்வதற்கு இட்டுச் செல்கிறது . இதுவே அனைத்து பாவங்களுக்கும் மூலாதாரமாகும் . இது ஒரு பெரிய அரக்கனாகும் . நாம் கோபத்தை கட்டுப்படுத்த முடிந்தால் , நாம் இறை நாமஸ்மரணையின் மூலம் புண்ணியத்தைப் பெற முடியும்.
ஒரு கட்டுக்கடங்காத மனமே மனிதனின் முதல் எதிரி - பாபா