azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 24 Feb 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 24 Feb 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

Many people think that concentration is the same as meditation, but there is no such connection. Just look at this, I am now reading a newspaper. My eyes are looking at the letters. My hand is holding the paper. My Intelligence is thinking now. Mind is also thinking. Thus, when the eyes are doing their work, the hand is doing its work, intelligence is doing its work, and the mind is also doing its work, that is how I am able to get the contents of the newspaper. It means, if I want to get the matter contained in the newspaper, all these enumerated senses are concentrated and they are all coordinated and are working on the newspaper. All the normal routines, like walking, talking, reading, writing, eating, etc. are possible as a result of concentration. Many are under the false impression that concentration is identical with meditation, and they take to a wrong path! Concentration is something below your senses, whereas meditation is something above your senses. (Divine Discourse, Mar 28, 1975)
RISING ABOVE YOUR SENSES IS MEDITATION! - BABA
பலர் மனக்குவிப்பும், தியானமும் ஒன்றே என நினைக்கிறார்கள்,ஆனால் அதற்கு எந்த சம்பந்தமும் இல்லை.இதைப் பாருங்கள், நான் ஒரு தினசரிப் பத்திரிக்கையைப் படித்துக் கொண்டு இருக்கிறேன்.என்னுடைய கண்கள் எழுத்துக்களைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றன.என்னுடைய கை பத்திரிக்கையைப் பிடித்துக் கொண்டு இருக்கிறது.என்னுடைய புத்தி இப்போது சிந்தித்துக் கொண்டு இருக்கிறது. என் மனமும் கூட யோசித்துக் கொண்டு இருக்கிறது. இவ்வாறு, என்னுடைய கண்கள் அவற்றின் வேலையைச் செய்து கொண்டு இருக்கின்றன,கை அதன் வேலையைச் செய்து கொண்டு இருக்கிறது, புத்தி அதன் வேலையைச் செய்து கொண்டு இருக்கிறது, மனமும் கூட அதன் வேலையைச் செய்து கொண்டு இருக்கிறது: அதனால் தான் என்னால் தினசரிப் பத்திரிக்கையில் உள்ளதைப் படிக்க முடிகிறது.இதன் பொருள்,தினசரிப் பத்திரிக்கையில் உள்ள விஷயத்தை நான் பெற வேண்டும் என்றால், இந்த பட்டியல் இடப்பட்ட புலன்கள் அனைத்தும் மனக்குவிக்கப் பட்டும், அவை அனைத்தும் ஒருங்கிணைக்கப் பட்டும், தினசரிப் பத்திரிக்கையின் மீது வேலை செய்து கொண்டும் இருக்க வேண்டும் என்பதாகும். சாதாரண பழக்கங்களான, நடப்பது, பேசுவது,எழுதுவது, சாப்பிடுவது போன்றவை மனக்குவிப்பின் ஒரு விளைவே. பலர் மனக்குவிப்பும், தியானமும் ஒன்றே என தவறான எண்ணத்தில் இருக்கிறார்கள், மேலும் அதனால் ஒரு தவறான பாதையைப் பின்பற்றுகிறார்கள்! மனக்குவிப்பு என்பது உங்களது புலங்களுக்கு கீழே உள்ளதாகும், தியானம் என்பது உங்களது புலங்களுக்கு மேலே உள்ள ஒன்றாகும்.
உங்களது புலன்களை மீறி மேல் எழுவதே தியானம்- பாபா