azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 21 Feb 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 21 Feb 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

What is required is the awareness of the vicious game that mind plays. It presents before your attention, one source after another of temporary pleasure; it doesn’t allow any interval for you to weigh pros and cons. When hunger for food is appeased, it holds before the eye, the attraction of a movie, it reminds the ear of the charm of music, and it makes the tongue water for the pleasant taste of something it craves for. The wish becomes very soon the urge for action, urge soon gathers strength and yearning becomes uncontrollable. The burden of desires gradually becomes too heavy and man gets dispirited and sad. Train the mind to turn towards intelligence for inspiration and guidance, not towards senses for adventures and achievements! That will make it an instrument for reducing your vagaries and saving time and energy for more vital matters! Through continuous and consistent Sadhana, man can control the vagaries of the mind, which by their variety and vanity cause disappointment and distress. (Divine Discourse, Apr 01, 1975)
COMMAND THE MIND, REGULATE YOUR CONDUCT, AND KEEP YOUR HEART
STRAIGHT AND CLEAR, THEN YOU WILL GET THE GRACE OF GOD. - BABA
மனம் விளையாடும் தீய விளையாட்டின் விழிப்புணர்வே இப்போதைய தேவை. அது உங்கள் கவனத்திற்கு முன் ஒன்றன் பின் ஒன்றாக தாற்காலிகமான சுகத்தின் மூலாதாரங்களை வைக்கிறது;நீங்கள் நன்மை, தீமைகளை சீர்தூக்கிப் பார்ப்பதற்கு எந்த ஒரு இடைவெளியையும் அது அனுமதிப்பதில்லை. உணவிற்கான பசி தீர்ந்தவுடன், அது ஒரு சினிமாவின் ஈர்ப்பைக் கண் முன் வைக்கிறது,காதுக்கு ஒரு இசையின் கவர்ச்சியை நினைவுட்டுகிறது, நாக்கு ஏங்கும் ஏதோ ஒன்றின் இனிமையான சுவைக்காக, அதில் எச்சிலை ஊற வைக்கிறது. ஆசை வெகு விரைவில் செயலுக்கான வேண்டுகோளாகி, வேண்டுகோள் விரைவில் வலுப்பெற்று, ஏக்கம் கட்டுக் கடங்காமல் போய் விடுகிறது. ஆசைகளின் சுமை படிப்படியாக மிகவும் அதிகமானதாக ஆகி, மனிதன் உற்சாகமிழந்து, சோகமடைந்து விடுகிறான். சாகசங்கள் மற்றும் சாதனைகளுக்காக புலன்களை நோக்கி அல்லாமல், உத்வேகம் மற்றும் வழிகாட்டுதலுக்காக புத்தியை நோக்கி மனம் திரும்புவதற்கு பயிற்சி அளியுங்கள்! இது, மனதை ஊசலாட்டங்களைக் குறைப்பதற்கும், மிக முக்கியமான விஷயங்களுக்காக நேரத்தையும் சக்தியையும் மிச்சப்படுத்துவதற்கும் ஆன ஒரு கருவியாக ஆக்கி விடும்! இடையறாத மற்றும் சீரான ஆன்மிக சாதனையின் மூலம்,அவற்றின் பலவகை மற்றும் கர்வத்தினால் ஏமாற்றத்தையும், துயரத்தையும் ஏற்படுத்தும் மனதின் ஊசலாட்டங்களை, மனிதன் கட்டுப்படுத்த முடியும்.
மனதைப் பணிய வைத்து,நடத்தையை ஒழுங்கு படுத்தி, உங்கள் இதயத்தை நேராகவும், தெளிவாகவும் வைத்துக் கொள்ளுங்கள்; பின்னர், நீங்கள் இறை அருளைப் பெறுவீர்கள் - பாபா