azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 18 Feb 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 18 Feb 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

One does not have to search for spiritual power, going around the world and spending a lot of money. Be in your own house, develop it in yourself - such spiritual power is in You! You don't have to run for it here and there. God is not external, God is not outside you, God is inside you. You are not human, you are God yourself. And when you are able to realise that, and when you are able to develop the spiritual power from within you, then you will see God. You are going in the path of worldly consciousness. When you take the path of superconsciousness, you will get realisation, and you will be able to see the Truth. The first thing you have to do is to develop self-confidence. It is such people who have no confidence in their own self who begin to wander about and waver, and take to various different paths. - Divine Discourse, Mar 28, 1975
GOD IS IN YOU, ABOVE YOU, AROUND YOU, GUIDING AND GUARDING YOU ALWAYS.
GOD IS LOVE. GOD IS PEACE. GOD IS STRENGTH. - BABA
உலகத்தைச் சுற்றி வந்து, நிறையப் பணத்தை செலவழித்து ஒருவர் ஆன்மிக சக்தியைத் தேட வேண்டியதில்லை.உங்களது சொந்த வீட்டிலேயே இருந்து கொண்டு, அதை நீங்களே உங்களுள் வளர்த்துக் கொள்ளுங்கள்- இப்படிப் பட்ட சக்தி உங்களுள்ளேயே இருக்கிறது ! இதற்காக நீங்கள் அங்கும், இங்கும் ஓடத் தேவையில்லை. இறைவன் புறத்திலோ, உங்களுக்கு வெளியிலோ இல்லை, இறைவன் உங்களுள்ளேயே இருக்கிறான். நீங்கள் மனிதரல்ல, நீங்களே இறைவன் தான். மேலும் எப்போது நீங்கள் இதை உணருகிறீர்களோ, எப்போது உங்களுக்கு உள்ளிருந்தே உங்களால் ஆன்மிக சக்தியை வளர்த்துக் கொள்ள முடிகிறதோ, பின்னர் நீங்கள் இறைவனைக் காண்பீர்கள். உலகியலான உணர்வின் பாதையில் நீங்கள் சென்று கொண்டு இருக்கிறீர்கள். எப்போது நீங்கள் பரப்ரம்மத்தின் பாதையில் செல்கிறீர்களோ, உங்களுக்கு ஆத்ம சாக்ஷாத்காரம் கிடைக்கும் மேலும் உங்களால் சத்தியத்தைக் காண முடியும். முதன் முதலில் நீங்கள் செய்ய வேண்டியது தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது தான். தங்கள் மீதே நம்பிக்கை அற்ற இப்படிப் பட்ட மனிதர்களே அலைந்து திரிந்து, ஊசலாடத் தொடங்கி, வெவ்வேறு பாதைகளில் செல்வார்கள்.
இறைவன் உங்களுள்ளும், உங்களைச் சுற்றியும் இருந்து உங்களை எப்போதும் வழி நடத்திக் காக்கிறான். இறைவனே ப்ரேமை, இறைவனே சாந்தி, இறைவனே வலிமை- பாபா