azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 13 Feb 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 13 Feb 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

The heart full of satwa guna (purity) is the ocean of milk. Steady contemplation of the Divine, either as your own reality or as the ideal to be reached, is the Mandara mountain planted in it as a churning rod. Vasuki, the serpent that was wound around it as a rope, is the group of senses emitting poisonous fumes during the process of churning, nearly frightening the demons who held the head. The rope is held by good and bad impulses and both struggle with the churning process, eager for results. The grace of God is the Tortoise Incarnation, for the Lord Himself comes to the rescue once He knows that you are earnestly seeking the secret of Immortality. He comes, silently, unobserved, as the tortoise did, holding the manana (reflection) process unimpaired and serving as a steady base of all spiritual practices. Many things emerge from the mind when churned, but the wise wait patiently for the appearance of the guarantor of Immortality and seize upon it with avidity. - Divine Discourse, Jan 13, 1965
NO ONE CAN COMPREHEND HOW AND WHEN GOD IS GOING TO SHOWER HIS GRACE ON A SADHAKA (SPIRITUAL ASPIRANT) AND WHAT TYPE OF BOONS HE IS GOING TO GRANT. - BABA
ஸத்வ குணம் நிரம்பிய இதயமே பாற்கடலாகும். அதைக் கடைவைதற்காக வைக்கப்பட்டுள்ள மந்தர மலை எனும் ஒரு மத்து, உங்களது உண்மை நிலையாகவோ அல்லது அடைய வேண்டிய இலட்சியமாகவோ கொண்டு செய்யும் இடையறாத இறை தியானமே. கடைவதற்கான கயிறாகச் சுற்றி வைக்கப் பட்டு, கடையும் போது விஷ வாயுக்களைக் கக்கி, அதன் தலையைப் பிடித்திருக்கும் அசுரர்களை அச்சுறுத்தும் வாசுகி எனும் பாம்பு, புலன்களின் கூட்டமே. இந்தக் கயிறை நல்ல மற்றும் தீய உந்துதல்கள் பிடித்துக் கொண்டு, இரண்டுமே பலன்களை எதிர்பார்த்து, கடைவதில் போராடுகின்றன. நீங்கள் சிரத்தையாக அமரத்துவத்தின் இரகசியத்தை நாடுகிறீர்கள் என்று அறிந்தவுடனேயே, காப்பதற்காக, இறைவனே கூர்மாவதாரமாகத் தோன்றும் ஆமையே, இறைவனது அருளாகும். மனனத்தை (சிந்திப்பதை) சீர் குலைக்காமலும், அனைத்து ஆன்மிக சாதனைகளுக்கும் அதை ஒரு நிலையான அடிப்படையாக பணியாற்றுமாறும் பிடித்துக் கொண்டு, அவன் ஆமையைப் போல, அமைதியாக, எவரும் கவனிக்காதவாறு வருகிறான். மனதைக் கடையும் போது, பல பொருட்கள் வெளிப்படுகின்றன; ஆனால் அமரத்துவத்தின் உத்திரவாதம் அளிப்பவர் தோன்றுவதற்காகப் பொறுமையோடு காத்திருந்து, ஞானிகள் ஆர்வத்துடன் அதனைக் கைப்பற்றிக் கொள்வார்கள்.
இறைவன் எவ்வாறு, எப்போது, ஒரு ஆன்மிக சாதகன் மீது அவனது கருணையைப் பொழிவான் என்றோ, எந்த விதமான வரங்களை அளிப்பான் என்றோ , எவராலும் புரிந்து கொள்ள முடியாது- பாபா