azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 07 Feb 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 07 Feb 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

Our culture has upheld strength of mind and purity of thought, which are translated into beneficial resolutions and desires, as the essential requisites of a progressive human being. The mystery and splendour of God can be grasped only by a pure mind and a clear vision. That’s why the Lord granted a new eye to Arjuna so that he might not be confounded by His Glory. A resolution adopted by the mind is like a stone thrown into a Sarovara or lake. It produces ripples that affect the entire face and unsettles equanimity. A bad thought desecrates the individual as well as the community. Misery is infectious; your impurity can pollute too. A good sankalpa (resolution) sets up a series of such thoughts, each contributing its quota to the process of purification and strengthening. Bharatiya culture insists on purity of Sankalpa because, like a flagrant flower in the hand, it will spread its beneficial influence on others and through others! (Divine Discourse, Mar 30, 1973)
HUMAN LIFE IS A COMBINATION OF MORALITY, SPIRITUALITY AND RIGHTEOUSNESS. - BABA
பயனுள்ள ஸங்கல்பங்கள் மற்றும் ஆசைகளாக மாறும் மன வலிமை மற்றும் சிந்தனைத் தூய்மையே ஒரு முற்போக்கான மனிதனுக்கான அத்தியாவசியத் தேவைகள் என நமது கலாசாரம் நிலை நாட்டியுள்ளது. இறைவனின் மர்மத்தையும் மாட்சிமையையும் ஒரு தூய மனம் மற்றும் ஒரு தெளிவான பார்வையால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். அதனால்தான் அர்ஜுனனுக்கு அவருடைய மகிமையால் குழப்பம் அடையக்கூடாது என்பதற்காக இறைவன் ஒரு புதிய கண்ணைக் கொடுத்தான். மனம் ஏற்றுக் கொள்ளும் ஒரு ஸங்கல்பம், ஒரு ஏரி நீரில் விட்டு எறியப்பட்ட ஒரு கல்லைப் போன்றதாகும். அது, ஏரியின் மேற்பரப்பு அனைத்திலும் பரவி அதன் சமச்சீர் நிலையைக் குலைக்கும் அலைகளை உருவாக்குகிறது. ஒரு தீய சிந்தனை தனி மனிதன் மற்றும் சமுதாயத்தை சீர் குலைத்து விடுகிறது. துயரம் தொற்றிக் கொள்ளும்; உங்களது தூய்மையின்மையும் கூட மாசு படுத்தக் கூடியதே. ஒரு நல்ல ஸங்கல்பம் (தீர்மானம்) அதே போன்ற சிந்தனைகளின் தொடரை அமைக்கிறது; அதன் ஒவ்வொன்றும், தூய்மைப்படுத்தும் மற்றும் வலுப்படுத்தும் செயல்முறைக்கு தனது பங்கை அளிக்கின்றன. கையில் வைத்துள்ள ஒரு நறுமண மலரைப் போல, அதன் பயன் தரும் தாக்கத்தை பிறர் மீதும், பிறர் மூலமும் பரப்புவதால், பாரத கலாசாரம் ஸங்கல்பத்தின் பரிசுத்தத்தை வலியுறுத்துகிறது.
மனித வாழ்க்கை என்பது அறநெறி, ஆன்மீகம்
மற்றும் தர்மத்தின் சேர்க்கையாகும். - பாபா