azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 06 Feb 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 06 Feb 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

While trying to get the best out of nature's gifts, you must first be equipped with humility and simplicity; otherwise, you will only be dragged along into ruin, through many unfulfilled desires. Ravana desired Nature (Mother Sita was found as a child in a furrow of ploughed land) but he had not chastened himself enough through the sadhana of seeking God; that is why he met his downfall. Desire leads to anger, when it is foiled; anger weakens the body. It impairs the digestive system and chases one fast into old age. Remember, when Prema (Divine selfless Love) is installed in the heart, jealousy, hatred and untruth will find no place there. Do not seek Prema from others when you refuse Prema to others. This is not one-way traffic! Live in Prema, live with Prema, move with Prema, speak with Prema, think with Prema, and act with Prema. This is the best and the most fruitful Sadhana (spiritual effort). (Divine Discourse, Mar 30, 1973)
LOVE FOR ALL SHOULD SPONTANEOUSLY FLOW FROM YOUR HEART, AND SWEETEN ALL YOUR WORDS. - BABA
இயற்கையின் பரிசுகளிலிருந்து முடிந்த அளவு பயன் பெற முயலும் போது, நீங்கள் முதலில் பணிவும், எளிமையும் கொண்டவர்களாக இருக்க வேண்டும்; இல்லை எனில், பல தீராத ஆசைகளின் மூலம் நீங்கள் அழிவிற்கு இழுத்துச் செல்லப் படுவீர்கள். ராவணன் இயற்கையை விரும்பினான் (சீதா மாதா, நிலத்தை உழும்போது கலப்பையில் கண்டெடுக்கப் பட்ட ஒரு குழந்தையே), ஆனால், இறைவனை நாடும் ஆன்மீக சாதனையின் மூலம் அவன் தன்னைப் பண்படுத்திக் கொள்ளவில்லை; அதனால் அவன் வீழ்ச்சியைச் சந்தித்தான். ஆசை தோல்வி அடையும் போது, கோபத்திற்கு வழி வகுக்கிறது; கோபம் உடலை பலவீனமாக்குகிறது. அது ஜீரண மண்டலத்தை பழுதடையச் செய்து ஒருவரை வயோதிகத்திற்கு வேகமாக விரட்டி அடித்து விடுகிறது. எப்போது ப்ரேமை (தன்னலமற்ற தெய்வீகமான அன்பு) இதயத்தில் குடி கொள்கிறதோ, அப்போது, அங்கு பொறாமை, த்வேஷம் மற்றும் பொய்மைக்கு அங்கு இடமே இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் பிறருக்கு ப்ரேமையை மறுக்கும் போது, பிறரிடமிருந்து ப்ரேமையை நாடாதீர்கள். இது ஒரு வழிப் பாதை அல்ல! ப்ரேமையில் வாழுங்கள், ப்ரேமையுடன் வாழுங்கள், ப்ரேமையுடன் பழகுங்கள், ப்ரேமையுடன் சிந்தியுங்கள் மேலும் ப்ரேமையுடன் செயலாற்றுங்கள். இதுவே மிகச் சிறந்த மற்றும் பயனளிக்கும் ஆன்மிக சாதனையாகும்!
அனைவர் மீதும் ப்ரேமை, தானாகவே உங்கள் இதயத்திலிருந்து பெருகி ஓடி,உங்கள் சொற்கள் அனைத்தையும் இனிமையாக்க வேண்டும்- பாபா