azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 31 Jan 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 31 Jan 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

Render every thought into a flower, worthy to be held in His fingers; render every deed into a fruit, full of the sweet juice of love, fit to be placed in His hand; and render every tear holy and pure, fit to wash His lotus feet. The symbol on the flag at Prasanthi Nilayam is a reminder of this ideal, which you have to put into practice. It is the symbol of victory, achieved by steady endeavour over the diabolic foes of lust and greed, of envy and hate, of malice and conceit. It is the symbol of the silent state of supreme Bliss, won through self-control and self-realisation. Do not judge others, to decide whether they deserve your service. Find out only whether they are distressed; that is enough credential. Do not examine how they behave towards others; they can be certainly transformed by Love. Seva (Service) is for you as sacred as a vow, a sadhana, a spiritual path. (Divine Discourse, Feb 19, 1970)
SERVICE IS THE HIGHEST FORM OF WORSHIP AND THE BEST PENANCE;
IT IS THE VERY BREATH; IT CAN END ONLY WHEN BREATH TAKES LEAVE OF YOU! - BABA
ஒவ்வொரு சிந்தனையையும், இறைவன் கையில் ஏந்தத் தகுந்த ஒரு மலராக ஆக்குங்கள்; ஒவ்வொரு செயலையும், இறைவனது கரத்தில் அளிக்கத் தகுந்த, ப்ரேமையின் இனிய ரசம் ததும்பும் ஒரு பழமாக ஆக்குங்கள்; ஒவ்வொரு கண்ணீர் துளியையும், அவனது மலர் பாதங்களைக் கழுவுவதற்கு ஏற்ற புனித மற்றும் பரிசுத்தமான நீராக ஆக்குங்கள். பிரசாந்தி நிலயத்தில் உள்ள கொடியில் உள்ள சின்னம், நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய இந்த இலட்சியத்தை நினைவூட்டுவதாகும். இது, காமம் மற்றும் பேராசை, பொறாமை மற்றும் வெறுப்பு, தீமை மற்றும் அகந்தை ஆகியவற்றின் தந்திரமான எதிரிகளின் மீது சீரான முயற்சியால் அடையப்படும் வெற்றியின் சின்னமாகும். இது சுயக்கட்டுப்பாடு மற்றும் ஆத்ம சாக்ஷாத்காரத்தின் மூலம் வெல்லப் பட்ட பேரானந்த மௌன நிலையின் அறிகுறியாகும். உங்களது சேவைக்குத் தகுந்தவர்களா எனத் தீர்மானிப்பதற்கு பிறரை கணிக்காதீர்கள். அவர்கள் துன்பத்திற்கு ஆளாகியுள்ளார்களா என்பதை மட்டுமே கண்டு பிடியுங்கள்; அதுவே போதுமான சான்றிதழாகும். அவர்கள் பிறரிடம் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதை ஆராயாதீர்கள்; அவர்களைக் கண்டிப்பாக ப்ரேமையால் நல்மனமாற்றம் செய்ய முடியும். சேவை என்பது உங்களுக்கு ஒரு விரதம், ஒரு ஆன்மிக சாதனை, ஒரு ஆன்மிகப் பாதையைப் போலப் புனிதமானதாகும்.
சேவையே, தலைசிறந்த வழிபாடும், மிகச் சிறந்த தவமும் ஆகும்.அதுவே உயிர் மூச்சு; மூச்சு உங்களை விட்டுப் போகும் போது தான் அது முடிவுக்கு வர முடியும்! - பாபா