azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 28 Jan 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 28 Jan 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

In many countries and human communities, we have only one faith, one path, one object of adoration, one form of worship, that has sent down roots and borne fruits. This faith may be indigenous or imported, but people in these regions have learnt to assimilate it and are allergic to others. In India, on the other hand, there are, since ages, many faiths and many paths, reflecting all the urges of man which lead him inward and upward. Hence, there are manifold alternatives from which man can choose the one that suits his stage of spiritual growth and with his feet firm on that step, he can raise himself up to greater heights. Indian Culture is like the ocean, which has in it the waters of all the rivers, from all the lands, from clouds that roam across all the continents. The ocean that is the source and goal of all the rivers is the bed on which Vishnu rests! That is why Vishnu is the God that symbolises the universal aspect of the Divine Principle in the Universe as well as beyond It. (Divine Discourse, Jan 14, 1970)
HUMAN LIFE IS A COMBINATION OF MORALITY, SPIRITUALITY AND RIGHTEOUSNESS. - BABA
பல தேசங்கள் மற்றும் மனித சமூகங்களில், நம்மிடம், ஆழமாகப் பதிந்து சென்று, பலன்களை அளிக்கும் ஒரே ஒரு மதம், ஒரே ஒரு மார்க்கம், போற்றுவதற்கு என ஒரே ஒரு பொருள், ஒரே ஒரு முறையான வழிபாடு என இருக்கின்றன. இந்த மதம் சொந்த நாட்டுடையதாகவோ அல்லது வெளியிலிருந்து வந்ததாகவோ இருக்கலாம், ஆனால்,இந்தப் பிரதேசத்தில் உள்ளவர்கள் இதை ஏற்றுக் கொள்வதைக் கற்றுக் கொண்டு, பிற மதங்களை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கிறார்கள். அதே சமயம், பாரதத்திலோ, பண்டைய காலம் தொட்டு, மனிதனை அகத்திற்கும், உயர்விற்கும் இட்டுச் செல்லும் அனைத்து உந்துதல்களை பிரதிபலிக்கும் பல மதங்களும், பல மார்க்கங்களும் இருக்கின்றன. எனவே, மனிதன்,அவனது ஆன்மிக முன்னேற்ற நிலைக்கு ஏற்ற ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதில் நிலையாகக் கால் பதித்து, தன்னைத் தானே மிகச் சிறந்த மேல் நிலைக்கு உயர்த்திக் கொள்வதற்கு, பல விதமான மாற்று மார்க்கங்கள் உள்ளன. அனைத்து நதிகள், அனைத்து பிரதேசங்கள் மற்றும் அனைத்து கண்டங்களிலும் சஞ்சரிக்கும் மேகங்கள் ஆகியவற்றின் நீரைத் தன்னுள் கொண்டுள்ள கடலைப் போன்றதே பாரத கலாசாரம். அனைத்து நதிகளின் ஆதாரமும், குறிக்கோளும் ஆன கடலே விஷ்ணு சயனிக்கும் படுக்கையாகும்! அதனால் தான் விஷ்ணு என்பது, உலகளாவியும் மற்றும் அதற்கு அப்பாற்பட்டும் உள்ள தெய்வீக அம்சத்தின் பிரபஞ்சமயமான தத்துவத்தைக் குறிக்கும் கடவுளாகும்.
மனித வாழ்க்கை என்பது அறநெறி, ஆன்மீகம் மற்றும் தர்மத்தின் ஒரு சேர்க்கையாகும். - பாபா