azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 25 Jan 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 25 Jan 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

The Lord is now worshipped by offering Him all things that you crave for, by treating Him with all the honour you like to be done to yourself. The idol is bathed and washed, bedecked with jewels, fed and fanned, surrounded with fragrance, etc., since these are things you desire. But, the Lord is pleased only when you do things the Lord desires! How else then can you win His Grace? How else than by nursing and nourishing, succouring and saving His children? How else than by helping them to realise Him, as their Lord and Guardian, and cultivating faith in Him, through your own straight and sincere living! You must look upon all as limbs of your own body, and just as you try to heal any bruise or wound on any limb as quickly and as efficiently as possible, you must heal the woes and pains of others to the best of your ability and as far as your means allow! (Divine Discourse, Feb 19,1970)
SERVICE IS THE HIGHEST FORM OF WORSHIP AND THE BEST PENANCE. - BABA
நீங்கள் ஏங்கும் எல்லாவற்றையும் அவருக்கு வழங்குவதன் மூலமும், நீங்களே செய்ய விரும்பும் அனைத்து மரியாதையுடன் அவரை நடத்துவதன் மூலமும், இறைவன் இப்போது ஆராதிக்கப்படுகிறார், இறைவனது விக்ரஹம் அபிஷேகம் செய்யப்பட்டு அலம்பப்படுகிறது, ஆபரணங்களால் அலங்கரிக்கப் படுகிறது, பிரசாதம் அளிக்கப்பட்டு விசிறப்படுகிறது, வாசனைத் திரவியங்களால் சூழப்படுகிறது, ஏனென்றால், இவை எல்லாம் நீங்கள் விரும்பும் விஷயங்கள். ஆனால், இறைவன் விரும்பும் விஷயங்களை நீங்கள் செய்யும் போது மட்டுமே , அவன் மகிழ்ச்சி அடைவான்.வேறு எப்படி பின்னர் நீங்கள் அவனது அருளைப் பெற முடியும்? அவனது குழந்தைகளை பராமரித்து, வளர்த்து, ஆதரித்துக் காப்பாற்றினால் அன்றி வேறு எப்படிப் பெற முடியும்? உங்களது சொந்த நேரான மற்றும் சிரத்தையான வாழ்க்கையின் மூலம்,அவர்கள், இறைவனை தங்களது பகவான் மற்றும் பாதுகாவலனாக உணர்ந்து, அவன் மீது நம்பிக்கை வைக்க உதவுவதன் மூலம் அன்றி, வேறு எவ்வாறு பெற முடியும் ! அனைவரையும், உங்களது சொந்த உடலின் அங்கங்களாகக் கருதி, எந்த அங்கத்திலும் ஏற்படும் எந்த சிராய்ப்பு அல்லது காயத்தை, எவ்வளவு வேகமாகவும், திறமையாகவும் நீங்கள் குணப்படுத்த முயல்வீர்களோ, அவ்வாறே, மற்றவர்களின் துயங்களையும், வேதனைகளையும், உங்களது மிகச் சிறந்த திறனுடனும், உங்களால் முடிந்த வரையிலும், தீர்த்து வைக்க வேண்டும்.
சேவையே, தலைசிறந்த வழிபாடும், மிகச் சிறந்த தவமும் ஆகும் - பாபா