azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 23 Jan 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 23 Jan 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

Established in this bent of mind (of seeing the Lord in all), the devotee becomes the devoted servant of all, with no sense of superiority or inferiority. This is a vital step (7), which presages great spiritual success. (8) This takes the seeker so near the Lord that one feels like the comrade and friend, the sharer of God's power and mercy, of God's triumphs and achievement, one becomes His sakha like Arjuna had become. (9) As can be inferred, this is the prelude to the final step of total surrender, or Atmanivedanam, yielding fully to the Will of the Lord which the seeker knows through one’s own purified intuition. You will note that the seventh step is dasyam (the servant stage). That is the stage of service, which every person calling oneself a social worker, or volunteer, or sevak has to reach. It is more fruitful than reciting the Name or counting beads, or spending hours in meditation, though one's service will be richer and more satisfying if done on the basis of spiritual discipline. (Divine Discourse, Feb 19, 1970)
LOVE FOR GOD MUST BE MANIFESTED AS LOVE FOR MAN,
AND LOVE MUST EXPRESS ITSELF AS SERVICE. - BABA
இந்த மனப்பாங்கில் (அனைவரிலும் இறைவனைக் காணும்) நிலை கொண்டு விட்ட பக்தன், உயர்வு அல்லது தாழ்வு உணர்வின்றி அனைவரது ஆத்மார்த்த சேவகனாக ஆகி விடுகிறான். தலை சிறந்த ஆன்மிக வெற்றிக்கு முன்னோடியாக வரும் இது ஒரு முக்கியமான (7) படியாகும். (8) இது சாதகரை இறைவனுக்கு எவ்வளவு அருகாமையில் கொண்டு செல்கிறது என்றால்,ஒருவர் அவனது சகா மற்றும் தோழனாகவும்,இறைவனது சக்தி மற்றும் கருணை, இறைவனது வெற்றிகள் மற்றும் சாதனைகளைப் பகிர்ந்து கொள்பவராகவும் உணர்ந்து, அர்ஜூனனைப் போல இறைவனது சகாவாக ஆகி விடுகிறார். (9) ஆன்மிக சாதகர் பரிசுத்தமாக்கப்பட்ட தனது உள்ளுணர்வின் மூலம் தெரிந்து கொண்ட இறைவனது ஸங்கல்பத்திற்கு, முழுமையாகப் பணிந்து விடும் ஆத்ம நிவேதனம் அல்லது பரிபூரண சரணாகதி எனும் இறுதிக் கட்டத்திற்கு முந்திய நிலை இதுவே என்பதை ஊகித்துக் கொள்ளலாம். ஏழாவது படி தாஸ்யம் (சேவகனது நிலை) என்பதைக் கவனியுங்கள்.தங்களை ஒரு சமூகப் பணியாளர் அல்லது தன்னார்வலர் அல்லது சேவக் என அழைத்துக் கொள்ளும் ஒவ்வொருவரும் அடைய வேண்டிய சேவை நிலை இதுவே ஆகும். ஆன்மிக அடைப்படையில் ஆற்றப்படுமானால்,ஒருவரது சேவை சிறந்ததாகவும், அதிகத் திருப்தி அளிப்பதாகவும் இருந்தாலும் கூட, இறைநாமஸ்மரணை அல்லது ஜபம் செய்வது அல்லது மணிக்கணக்கில் தியானம் செய்வது என்பதைக் காட்டிலும், இது அதிகம் பயனளிப்பதாகும்.
இறைவன் பால் கொள்ளும் ப்ரேமை, மனிதன் மேல் கொள்ளும் ப்ரேமையாக உருவெடுக்க வேண்டும்;இந்த ப்ரேமை, தானே சேவையாக வெளிப்பட வேண்டும்- பாபா