azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 20 Jan 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 20 Jan 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

Sri Krishna has explained in the Gita that sorrow is the fruit of rajo guna (quality of passionate activity). He has also shown that only the person who recognises this truth and removes rajo and tamo guna (quality of sloth and inertia) from the heart, can be happy. As man has all the three gunas in his heart, he is bound. A farmer who wants to raise a crop in the field, at the outset, has to remove weeds from his field. If different types of weeds grow, the crop will be affected adversely. Removing the weeds is an essential precondition for getting a good crop. In the same way, a sadhaka (spiritual aspirant) who wants to realise 'atmananda' (joy of Atma), has to remove from the heart, various manifestations of rajo and tamo gunas in the form of malice, desire, greed, anger, hatred and jealousy. These six types of enemies of man are the children of rajo and tamo gunas. We won't be able to experience the joy of Atma (individual soul) as long as these weeds are there. (Divine Discourse, Sep 12, 1984)
LIFE MUST BE AN INCESSANT PROCESS OF REPAIR AND RECONSTRUCTION,
OF DISCARDING EVIL AND DEVELOPING GOODNESS. - BABA
பகவான் ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீமத் பகவத் கீதையில், துக்கம் என்பது ரஜோ குணத்தின் பலனே என்று விளக்குகிறார்.அவரே,எந்த ஒரு மனிதர் இந்த உண்மையை உணர்ந்து,ரஜோ மற்றும் தாமஸ குணங்களை இதயத்திலிருந்து நீக்குகிறாரோ, அப்போது தான் அவர் சந்தோஷமாக இருக்க முடியும் என்றும் கூட எடுத்துக் காட்டுகிறார். மனிதனது இதயத்தில் இந்த அனைத்து மூன்று குணங்களும் இருப்பதால், அவன் கட்டுண்டு இருக்கிறான்.ஒரு விவசாயி, தனது நிலத்தில் ஒரு பயிரை விளைவிக்க விரும்பினால், முதன் முதலில், அவரது நிலத்திலிருந்து களைகளை எடுக்க வேண்டும். பல விதமான களைகள் விளையுமானால், பயிர் வெகுவாக பாதிக்கப்படும். ஒரு நல்ல விளைச்சல் பெறுவதற்கு, களையெடுப்பது என்பது ஒரு அத்தியாவசியமான முன் முதல் தேவையாகும். அதைப் போலவே, ஆத்மானந்தத்தை உணர விழையும் ஒரு ஆன்மிக சாதகர், அவரது இதயத்திலிருந்து ரஜோ மற்றும் தாமஸ குணங்களின் வெளிப்பாடுகளான வன்மம், ஆசை, கஞ்சத்தனம், கோபம், வெறுப்பு மற்றும் பொறாமை ஆகியவற்றை நீக்க வேண்டும். மனிதனின் இந்த ஆறு விதமான விரோதிகள் ரஜோ மற்றும் தாமஸ குணங்களின் பிள்ளைகளே. இந்தக் களைகள் இருக்கும் வரை நாம் ஆத்மானந்தத்தை அனுபவிக்க முடியாது.
பழுதுபார்ப்பு மற்றும் புனரமைப்பு, தீமைகளை நிராகரித்தல் மற்றும் நல்லவற்றை வளர்ப்பதற்கான ஒரு இடையறாத செயல்முறையாக வாழ்க்கை இருக்க வேண்டும். - பாபா