azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 17 Jan 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 17 Jan 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

Everyone has five advisors in life. They are who, when, what, where and how. Before undertaking any action, answers should be got for these five questions. When the correct answers are got, the actions based on them will be right. People today act without concern for these factors. In this matter everyone can rely on his own judgement using his powers of observation and discretion. All instruments for this purpose are available to everyone in his organs of perception and action. In every limb and organ there is a divine power. This divine potency is called Angirasa. The name is derived from the fact that the Divine is present in every Anga (limb) as a Rasa (essence). There is no need to search for the Divine outside yourself. You are Divine. All your powers are Divine potencies! Your life must be based on truth and righteousness. Develop the conviction that whatever happens to you is for good. (Divine Discourse, Jan 14, 1997)
GOD IS THE EMBODIMENT OF DHARMA; HIS GRACE IS WON BY DHARMA. - BABA
ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஐந்து ஆலோசகர்கள் இருக்கிறார்கள். யார், எப்போது,என்ன, எங்கு மற்றும் எப்படி என்பதே அவர்கள். எந்தச் செயலை மேற் கொள்வதற்கு முன், இந்த ஐந்து கேள்விகளுக்கான பதில்களைப் பெற வேண்டும். சரியான பதில்கள் கிடைத்து விட்ட போது, அவற்றை அடிப்படையாகக் கொண்ட செயல்கள் சரியானவையாக இருக்கும்.மனிதர்கள் இந்த அம்சங்களைப் பற்றிக் கவலைப்படாமல் இன்று செயல்படுகிறார்கள். இந்த விஷயத்தில் ஒவ்வொருவரும் தனது கவனிப்பு மற்றும் விவேகத்தின் சக்திகளைப் பயன்படுத்தி தனது சொந்த முடிவை நம்பி ஏற்கலாம்.இந்த நோக்கத்திற்குத் தேவையான அனைத்து கருவிகளும் ஒவ்வொருவரிடத்திலும் அவர்களது கர்மேந்திரியங்கள் மற்றும் ஞானேந்திரியங்களிடம் இருக்கின்றன. உடலின் ஒவ்வொரு பாகம் மற்றும் அங்கத்திலும், தெய்வீக சக்தி இருக்கிறது. இந்த தெய்வீக ஆற்றலே அங்கீரஸா என அழைக்கப் படுகிறது. இந்தப் பெயர், ஒவ்வொரு அங்கத்திலும் (உடலின் பாகம்) ரஸமாக (சாராம்சம்), தெய்வீகம் இருக்கிறது என்ற உண்மையிலிருந்து பெறப்பட்டதே ஆகும்.உங்களுக்கு வெளியிலிருந்து தெய்வீகத்தைத் தேடுவதற்கு அவசியமே இல்லை. நீங்கள் அனைவருமே தெய்வீகமானவர்களே. உங்களது சக்திகள் அனைத்தும் தெய்வீக ஆற்றல்களே! உங்களது வாழ்க்கை சத்தியம் மற்றும் தர்மத்தை ஆதாரமாகக் கொண்டு இருக்க வேண்டும். உங்களுக்கு எது நடந்தாலும் அது உங்களது நலனுக்காகவே என்ற நம்பிக்கையை அபிவிருத்தி செய்து கொள்ளுங்கள்.
இறைவன் தர்மத்தின் திருவுருவம்.
தர்மத்தினாலேயே அவனது அருள் பெறப்படுகிறது- பாபா