azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 13 Jan 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 13 Jan 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

Man’s vision should not be confined solely to external objects and worldly things, which are transient and perishable. Man has been given this vision so that he may see the pure, sacred Divine Consciousness abiding in his heart. The northward motion of the Sun (Uttarayana) is the appropriate occasion for developing this inward vision. This is the royal road for the spiritual aspirant to realise the Supreme. From this day, the Sun wears a peaceful and pleasing aspect. It is not enough, therefore, merely to recognise the northward movement of the Sun in this period. Every effort should be made to direct the vision inwards towards the pure, sacred Indwelling Self. This is the period for cherishing sacred thoughts and performing holy deeds. The sages and seers of ancient times used to wait for the arrival of the Uttarayana to embark on their sacred tasks. (Divine Discourse, Jan 14, 1994)
ONLY WHEN ONE IS ABLE TO GET RID OF EGOTISM AND ATTACHMENT CAN ONE DEVELOP THE INNER VISION. - BABA
மனிதனது கண்ணோட்டம், தாற்காலிகமான மற்றும் அழியக்கூடிய வெளிப்புறப் பொருட்கள் மற்றும் உலகியலான விஷயங்களோடு மட்டுமே இருந்து விடக் கூடாது. அவனது இதயத்தில் உறையும் பரிசுத்தமான மற்றும் புனிதமான தெய்வீக உள்ளுணர்வை காண்பதற்காகவே, மனிதனுக்கு இந்தக் கண்ணோட்டம் அளிக்கப் பட்டுள்ளது. சூரியனது வடக்கு நோக்கிய பயணத்தைக் குறிக்கும் உத்தராயண புண்ய காலமே இப்படிப்பட்ட அகக் கண்ணோட்டத்தை வளர்த்துக் கொள்வதற்கான தகுந்த சந்தர்ப்பமாகும். ஆன்மிக சாதகன் பரமாத்மாவை உணருவதற்கான ராஜ பாட்டை இதுவே. இந்த நாளிலிருந்து சூரியன் ஒரு சாந்தமான மற்றும் இனிமையான அம்சத்தை அணிந்திருப்பான். எனவே, இந்தக் கால கட்டத்தில் சூரியனது வடக்கு நோக்கிய பயணத்தை வெறுமனே உணருவது மட்டும் போதுமானதல்ல.பரிசுத்தமான , புனிதமான உள்ளுறையும் ஆத்மாவை நோக்கி கண்ணோட்டத்தைச் செலுத்துவதற்கான எல்லா முயற்சியையும் மேற்கொள்ள வேண்டும். புனிதமான சிந்தனைகளை மதிக்கவும், புனிதமான செயல்களை ஆற்றுவதற்கும் ஆன காலம் இதுவே. பண்டைய காலத்து முனிவர்களும், ரிஷிகளும் தங்களது புனிதப் பணிகளைத் தொடங்குவதற்கு, உத்தராயண புண்ய காலத்தின் வருகைக்காகக் காத்திருப்பார்களாம்.
எப்போது ஒருவரால் அகந்தை மற்றும் பற்றுதலை விட்டொழிக்க முடிகிறதோ,அப்போது தான் அக திருஷ்டியை ஒருவர் வளர்த்துக் கொள்ள முடியும்- பாபா