azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 12 Jan 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 12 Jan 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

Born in society, brought up in society, educated by society and deriving countless benefits from society, what are you doing for society? Social service should be regarded as an expression of gratitude to society for what it has done to us. Without society we cannot survive. Women should treat even their daily chores as a form of concentrated work. If they are unable to attend a satsang (spiritual congregation) on account of household duties, they should not feel miserable on that account. Discharge of duties at home is as sacred as attending a satsang. Only if you do your duties at home properly will you be able to render proper service outside. In whatever work you do at home, whether sweeping the floor or making chapatis (Indian flatbread), convert it into a form of spiritual exercise. Infuse every action with love of the Divine and dedicate it to God. (Divine Discourse, Mar 23, 1989)
THE FIRST LESSON IN SERVICE HAS TO BE LEARNED IN THE FAMILY ITSELF. ONE MUST ENGAGE IN LOVING SERVICE HERE AND PREPARE FOR THE WIDER SERVICE THAT AWAITS OUTSIDE THE HOME. - BABA
இந்த சமுதாயத்தில் பிறந்து, சமுதாயத்தால் வளர்க்கப்பட்டு, சமுதாயத்தால் கல்வி கற்பிக்கப் பட்டு, எண்ணற்ற பலன்களை சமுதாயத்திலிருந்து பெற்றுக் கொண்ட நீங்கள், இந்த சமுதாயத்திற்கு என்ன செய்திருக்கிறீர்கள்? சமுதாய சேவையை, இந்த சமுதாயம் நமக்கு செய்துள்ள அனைத்திற்கும் நன்றியை வெளிப்படுத்தும் ஒன்றாகக் கருத வேண்டும்.இந்த சமுதாயம் இன்றி நாம் வாழ இயலாது. பெண்கள், தங்களது தினசரி கடமைகளைக் கூட தியானமாகக் கருத வேண்டும். வீட்டு வேலைகளின் காரணமாக, அவர்கள், ஸத்ஸங்கத்தில் பங்கேற்ற முடியவில்லை என்றால், அதற்காக வருத்தப் படக்கூடாது.வீட்டின் கடமைகளை ஆற்றுவது, ஒரு ஸத்ஸங்கத்தில் பங்கேற்பதைப் போன்று புனிதமானதே. வீட்டில் உங்களது கடமைகளை சரிவர ஆற்றினால் மட்டும் தான், வெளியிலும் நீங்கள் சரியாக சேவை ஆற்ற முடியும். நீங்கள் வீட்டில் எந்த வேலையைச் செய்தாலும், தரையைப் பெருக்கினாலோ அல்லது சப்பாத்திகளை செய்தாலோ, அதையும் ஒரு ஆன்மீக சாதனையாக மாற்றி விடுங்கள். ஒவ்வொரு செயலையும் தெய்வீக அன்பில் தோய்த்து, அதை இறைவனுக்கே அர்ப்பணித்து விடுங்கள்.
சேவையின் முதல் பாடத்தை குடும்பத்திலிருந்தே தான் கற்றுக் கொள்ள வேண்டும்.ஒருவர் இங்கு ப்ரேமை நிறைந்த சேவை ஆற்றி, இல்லத்திற்கு வெளியே காத்திருக்கும் பரந்த சேவைக்கு தயார் செய்து கொள்ள வேண்டும் - பாபா