azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 04 Jan 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 04 Jan 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

While the Lord is ever by the side, people are busy searching for God all over the world! By exploring the external, you can never purify the internal. It is essential to transform your consciousness. Rectify your conduct and actions, because everything depends on your actions. Adhering to the righteous path with a pure heart, you have to divinise your life. All prayers, japas and pujas that are offered are only intended to purify the heart. All those who achieved greatness in any field, be it education or science have been able to do so solely because of their conduct. Neither physical strength nor wealth, not even intellectual ability can make one respected and honoured. It is the way one lives that confers honour and dignity on him. If you entertain righteous thoughts, you will realise that all of you are in God’s home. The whole universe is a mansion of God! Once you realise this truth, how can any differences arise? (Divine Discourse, Dec 25, 1989)
I AM IN YOU, AROUND YOU, WITHIN YOU, ABOVE YOU, GUIDING YOU AND GUARDING YOU AT ALL TIMES. - BABA
இறைவன் எப்போதும் பக்கத்திலேயே இருந்த போதும் கூட,மக்கள் இறைவனை உலகெங்கும் சுறுசுறுப்பாகத் தேடிக் கொண்டு இருக்கிறார்கள் ! புறத்தில் தேடுவதன் மூலம், நீங்கள் ஒருபோதும் அகத்தைப் பரிசுத்தமாக்க முடியாது. நீங்கள் உங்களது உள்ளுணர்வை மாற்றிக் கொள்ள வேண்டும்.உங்களது நடத்தை மற்றும் நடவடிக்கைகளைத் திருத்திக் கொள்ளுங்கள்; ஏனெனில் அனைத்தும் உங்களது செயல்பாடுகளைப் பொறுத்தே இருக்கும்.ஒரு பரிசசுத்தமான இதயத்துடன் தார்மீகமான பாதையைப் பற்றி ஒழுகுவதன் மூலம், நீங்கள் உங்கள் வாழ்க்கையைத் தெய்வீகமானதாக ஆக்கிக் கொள்ள வேண்டும். அனைத்து பிரார்த்தனைகள், ஜபங்கள் மற்றும் பூஜைகளும் இதயத்தைப் பரிசுத்தப் படுத்துவதற்காகவே.கல்வி அல்லது விஞ்ஞானம் என்ற எந்தத் துறையாக இருந்தாலும் அதில் சிறந்து விளங்கிய எவரும், அவர்களது நடத்தையின் காரணமாக மட்டுமே அவ்வாறு விளங்க முடிந்தது.உடல் பலமோ அல்லது செல்வமோ, ஏன் புத்தி கூர்மையோ கூட ஒருவரை மரியாதைக்கு உரியவராகவோ அல்லது கௌரவிக்கப் படக்கூடியவராகவோ ஆக்க முடியாது. ஒருவர் வாழும் முறையே மதிப்பு மற்றும் மரியாதையை அவருக்கு அளிக்கிறது. நீங்கள் தார்மீகமான சிந்தனைகளைக் கொண்டிருந்தால்,நீங்கள் அனைவருமே இறைவனது இல்லத்தில் இருக்கிறீர்கள் என்பதை உணர்வீர்கள்.இந்த பிரபஞ்சம் அனைத்துமே இறைவனது ஒரு மாளிகையாகும் ! ஒருமுறை இந்த உண்மையை நீங்கள் உணர்ந்து விட்டால்,வேற்றுமைகள் எவ்வாறு எழ முடியும்?
நான் உங்களுள், உங்களைச் சுற்றி, உங்களது அகத்தில், உங்களுக்கு மேலும் இருந்து , எல்லாக் காலங்களிலும்,உங்களை வழிநடத்திக் காக்கிறேன்- பாபா