azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 01 Jan 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 01 Jan 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

You must sow the seed of love in all loveless hearts. Water it with love. Let love flow in a flood and reach all. Modern man directs his love towards worldly objects and gets entangled in several complications. Love gives by giving and forgiving; Self lives by getting and forgetting. Cultivate selfless love. Love all. Let others think what they like. There is no need to fear anyone. Make your love pure. Then the whole world will become pure. Pray for the welfare of all and lead an ideal life. Human life is not gifted to you to hanker after worldly objects. Set an ideal to the whole world. What is the ideal you have to set? You must help all to your utmost capacity. The best way to love God is to love all and serve all. Adopting service and love as your ideals, start a new life from this moment - this is My blessing and benediction to you! (Divine Discourse, Jan 1, 2000)
ONCE YOU CULTIVATE LOVE, YOU DO NOT NEED TO ACQUIRE ANY OTHER PROPERTY. - BABA
ப்ரேமையற்ற அனைத்து இதயங்களிலும் நீங்கள் ப்ரேமையின் விதையை விதைக்க வேண்டும்.அவற்றில் ப்ரேமை எனும் நீரைப் பாய்ச்ச வேண்டும். ப்ரேமை ஒரு பெரு வெள்ளமாகப் புரண்டோடி அனைவரையும் அடையட்டும். நவீன கால மனிதன் தனது ப்ரேமையை உலகியலான பொருட்களை நோக்கிச் செலுத்தி, பல சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறான்.ப்ரேமை என்பது கொடுப்பதையும், மன்னிப்பதையும் தருகிறது.சுயநலம் என்பது எடுத்துக் கொள்வதிலும், மறப்பதிலும் வாழ்கிறது.தன்னலமற்ற ப்ரேமையை வளர்த்துக் கொள்ளுங்கள். அனைரையும் நேசியுங்கள்.மற்றவர்கள் என்ன நினைத்தாலும் நினைக்கட்டும்.எவருக்கும் அஞ்சத் தேவையில்லை.உங்கள் ப்ரேமையை பரிசுத்தமாக்கிக் கொள்ளுங்கள்.பின்னர் உலகனைத்தும் பரிசுத்தமாகி விடும். அனைவரது நலனுக்காகவும் பிரார்த்தித்து, ஒரு இலட்சிய வாழ்க்கையை நடத்துங்கள். உலகியலான பொருட்களின் பின் அலைவதற்காக மனித வாழ்க்கை உங்களுக்குப் பரிசாக அளிக்கப்பட வில்லை.உலகிற்கே ஒரு இலட்சியமாகத் திகழுங்கள்.நீங்கள் நிலை நாட்டவேண்டிய இலட்சியம் என்ன? உங்களால் முடிந்தவரை அனைவருக்கும் உதவி செய்யுங்கள்.இறைவனை நேசிப்பதற்கு மிகச் சிறந்த வழி, அனைவரையும் நேசித்து, அனைவருக்கும் சேவை செய்வதே. சேவையையும், ப்ரேமையையும் உங்களது இலட்சியமாக ஏற்றுக் கொண்டு, இந்தத் தருணத்திலிருந்து ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குங்கள் – இதுவே உங்களுக்கு எனது ஆசியும்,ஆசீர்வாதமும் ஆகும் !
நீங்கள் ஒரு முறை ப்ரேமையை வளர்த்துக் கொண்டு விட்டால்,
உங்களுக்கு வேறு எந்த சொத்தும் தேவையில்லை- பாபா