azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 31 Dec 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 31 Dec 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

Peace is essential for man at all the three levels: body, mind, and spirit. This is the reason we chant shanti (peace) three times. You can attain peace at these three levels only by developing love for God. The one without love for God will never be peaceful. All worldly pleasures are fleeting and momentary. The same sentiment was echoed by Sankaracharya: Ma kuru dhana jana yauvana garvam, Harathi nimeshath kalah sarvam - ‘Do not be proud of your wealth, progeny and youth. The tide of time may destroy them in a moment.’ What is happiness? Is it sitting in an air-conditioned room or partaking of delicious food? These confer happiness only at the physical and mental levels, not at the level of the Atma. True happiness is that which is related to the Atma. You should not be afraid of difficulties; they are passing clouds. Do not waver. Follow the heart, which is steady and unwavering. (Divine Discourse, Dec 25, 1998)
WHERE THERE IS LOVE, THERE IS TRUTH; WHERE THERE IS TRUTH, THERE IS PEACE;
WHERE THERE IS PEACE, THERE IS BLISS; WHERE THERE IS BLISS, THERE IS GOD. - BABA
மனிதனுக்கு உடல், மனம் மற்றும் ஆத்மா என்ற மூன்று நிலைகளிலும் சாந்தி அத்தியாவசியமாகிறது.இதன் காரணமாகத்தான் நாம் சாந்தி, சாந்தி, சாந்தி என மூன்று முறை உச்சரிக்கிறோம்.இறைவன் பால் ப்ரேமையை வளர்த்துக் கொள்வதனால் மட்டுமே, நீங்கள் இந்த மூன்று நிலைகளிலும் சாந்தியைப் பெற முடியும். இறைவன் பால் ப்ரேமை இல்லாதவன் ஒரு போதும் சாந்தியாக இருக்க முடியாது. உலகியலான அனைத்து சுகங்களும் மறையக்கூடியவை மற்றும் தாற்காலிகமானவையே. இந்த உணர்வைத் தான் ஆதி சங்கரரும், ‘’மா குருதன ஜன யௌவன கர்வம், ஹரதி நிமேஷா காலஸ் ஸர்வம் – ‘’உங்களது செல்வம், பரம்பரை மற்றும் இளமையைப் பற்றிக் கர்வம் கொள்ளாதீர்கள். காலம் எனும் அலை அவற்றை ஒரு நொடியில் அழித்து விடக் கூடும் ‘’ என்று எதிரொலிக்கிறார். சந்தோஷம் என்றால் என்ன? ஒரு குளிர் சாதனக் கருவி உள்ள அறையில் உட்கார்ந்திருப்பதா அல்லது மிகவும் சுவையான உணவை உண்பதா? இவை உடல் மற்றும் மனத்தளவில் மட்டுமே சந்தோஷத்தை அளிக்குமே அன்றி ஆத்மாவின் அளவில் அல்ல.உண்மையான சந்தோஷம் என்பது ஆத்மாவோடு சம்பந்தப்பட்டதே. நீங்கள் இன்னல்களைப் பற்றி பயப்படக் கூடாது; அவை கலையும் மேகங்களைப் போன்றவை. ஊசலாடாதீர்கள். நிலையாகவும், அலை பாயாமலும் இருக்கும் இதயத்தைப் பின்பற்றுங்கள்.
எங்கு ப்ரேமை இருக்கிறதோ, அங்கு சத்யம் இருக்கும்;எங்கு சத்யம் இருக்கிறதோ, அங்கு சாந்தி இருக்கும்; எங்கு சாந்தி இருக்கிறதோ, அங்கு ஆனந்தம் இருக்கும்; எங்கு ஆனந்தம் இருக்கிறதோ, அங்கு ஆண்டவன் இருப்பான்- பாபா