azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 29 Dec 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 29 Dec 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

Embodiments of Love! Everyone is born in this world, by the will of God. Having taken birth as a human being, one has to realise the Divinity within. Every human being is a messenger of God. The primary duty of every individual as a messenger of God, is to practice and propagate the principles of truth, love and peace, to experience the bliss, and to share it with others. The one who propagates the worldly, fleeting and ephemeral cannot be called a messenger of God. One should not waste one’s life in merely eating, drinking and sleeping. In fact, such a life is a blot on human nature itself! One has to overcome difficulties to be successful in life. Every activity should reflect the divine message. You see many people suffering. In what way are you helping them? Give happiness to those who are suffering. Consider your every activity as God’s work. (Divine Discourse, Dec 25, 1998)
THE BODY WILL SHINE IF THE CHARACTER IS FINE.
SERVICE OF MAN AND WORSHIP OF GOD WILL PRESERVE ITS CHARM. - BABA
ப்ரேமையின் திருவுருவங்களே! இறைவனின் ஸங்கல்பத்தின் படியே ஒவ்வொருவரும் இந்த உலகில் பிறந்துள்ளார்கள்.ஒரு மனிதனாகப் பிறவி எடுத்த பிறகு, ஒருவர் உள்ளுறையும் தெய்வீகத்தை உணர வேண்டும்.ஒவ்வொரு மனிதனும் ஒரு இறை தூதனே. ஒரு இறை தூதனாக உள்ள ஒவ்வொருவரின் தலையாய கடமை, சத்யம்,ப்ரேமை மற்றும் சாந்தி எனும் கோட்பாடுகளைக் கடைப்பிடித்துப் பரப்பி, ஆனந்தத்தை அனுபவித்து, அதை பிறருடன் பகிர்ந்து கொள்வதே ஆகும். உலகியலான, மறையக்கூடிய, நிலையற்றவற்றைப் பரப்பும் ஒருவரை ஒரு இறை தூதன் என அழைக்க முடியாது. ஒருவர், வெறும் உண்பது, உறிஞ்சுவது மற்றும் உறங்குவது என்பதிலேயே தனது வாழ்க்கையை வீணடிக்கக் கூடாது. உண்மையில் இப்படிப்பட்ட வாழ்க்கை மனித இயல்பிற்கே ஒரு களங்கம் போன்றது! ஒருவர் வாழ்க்கையில் வெற்றி பெற இன்னல்களை வென்றாகவே வேண்டும். ஒவ்வொரு செயலும் இறைவனது உபதேசத்தை பிரதிபலிக்க வேண்டும். நீங்கள் பல மனிதர்கள் துன்பப்படுவதைப் பார்க்கிறீர்கள். எந்த விதத்தில் நீங்கள் அவர்களுக்கு உதவுகிறீர்கள்? துன்பப்படுபவர்களுக்கு மகிழ்ச்சியை அளியுங்கள். உங்களது ஒவ்வொரு செயலையும் இறைவனது பணியாகக் கருதுங்கள்.
குணநலன்கள் சிறப்பாக இருந்தால், உடலும் ஓளி விட்டுத் திகழும். மனித சேவையும், மாதவ வழிபாடும் அதன் வசீகரத்தைப் பேணிக் காக்கும். -பாபா