azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 25 Dec 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 25 Dec 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

It was to teach mankind the greatness of divine love that Jesus came. He resolved on three tasks: one, to be filled with Divine love and to share it with others - this was the main purpose of his life; two, he should not succumb to praise or censure in carrying out his mission; three, to inspire in others the conviction that the Divinity within is omnipresent. Jesus considered spreading the gospel of love as his foremost task. He encountered many ordeals in carrying out his mission, but he regarded them all as challenges to be overcome. He was determined to treat pleasure and pain, and sickness and failure with equanimity. He could not bear to see anyone suffer. Every human being is potentially a messenger of God. Humanness demands that everyone should manifest the Divinity within him. Everyone should be a real messenger of God and strive to promote peace and security in the world. There is no other path to be followed. God's message is sacred and totally free from self-interest. (Divine Discourse, Dec 25, 1995)
"GOD IS IN EVERYONE. DO NOT REVILE ANYONE. DO NOT CAUSE HARM TO ANYONE."
THIS WAS JESUS' GREATEST MESSAGE. - BABA
மனித குலத்திற்கு தெய்வீக ப்ரேமையின் மகத்துவத்தைப் போதிப்பதற்காகவே ஏசு கிருஸ்து வந்தார்.அவர் மூன்று பணிகளை நிறைவேற்ற முடிவு எடுத்துக் கொண்டார்- ஒன்று தெய்வீக ப்ரேமையால் நிரம்பி ,அதனை பிறருடன் பகிர்ந்து கொள்வது- இதுவே அவரது வாழ்க்கையின் முக்கியக் குறிக்கோளாகும்; இரண்டாவது, அவர்,தனது பணியை நிறைவேற்றும் போது, புகழ்ச்சி அல்லது இகழ்ச்சிக்கு அடி பணியக்கூடாது; மூன்றாவது,உள்ளுறையும் தெய்வீகம், அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்துள்ளது என்பதை நம்புவதற்கு பிறருக்குள் உத்வேகம் அளிப்பது. ப்ரேமையின் நற்செய்தியைப் பரப்புவதை இயேசு தனது முதன்மையான பணியாகக் கருதினார்.அவர் தனது அவதாரப்பணியை நிறைவேற்றுவதில் பல இடர்களை சந்தித்தார்; ஆனால், அவர் அவற்றை எல்லாம் வெல்ல வேண்டிய சவால்களாகக் கருதினார்.சுகம் மற்றும் துக்கம், வியாதி மற்றும் தோல்வி ஆகியவற்றை சமச்சீரான மனப்பாங்குடன் கையாளுவதில் அவர் உறுதியாக இருந்தார்.எவரும் துன்பப்படுவதை அவரால் சகித்துக் கொள்ள முடிந்ததில்லை.ஒவ்வொரு மனிதனும் இறைவனின் ஒருசக்தி வாய்ந்த தூதனே. ஒவ்வொருவரும்,அவருக்குள் இருக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதே மனிதத்துவத்தின் வேண்டுகோளாகும். ஒவ்வொருவரும் இறைவனின் ஒரு தூதுவனாக இருந்து,உலகில்,சாந்தி மற்றும் பாதுகாப்பை வளர்க்கப் பாடுபட வேண்டும்.வேறு எந்தப் பாதையையும் பின்பற்ற வேண்டியதில்லை. இறைவனது செய்தி புனிதமானதும், முற்றிலும் சுயநலமற்றதும் ஆகும்.
"இறைவன் ஒவ்வொருள்ளும் உள்ளான். யாரையும் இகழாதீர்கள். எவருக்கும் தீங்கு இழைக்காதீர்கள்''- இதுவே ஏசு கிருஸ்துவின் தலைசிறந்த போதனையாகும்- பாபா