azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 23 Dec 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 23 Dec 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

Sat is the Existence Principle, the ‘IS’ that is the basic truth of the Universe. Align with the Truth, the Sat in you, the Satya (Reality) on which the Mitya (false) is imposed by minds that do not see light. By dwelling in that Sat, the flame is lit, light dawns, darkness flees and the Jnana Bhaskara (Sun of Realisation) rises. When there is hard rock below, you have to bore deeper for tapping the underground pure water. Softer the subterranean soil, quicker the success. Make your heart soft; then success is quick in sadhana. Talk soft, talk sweet, talk only of God - that is the process of softening the subsoil. Develop compassion, sympathy; engage in service, understand the agony of poverty, disease, distress and despair; share both tears and cheers with others. That is the way to soften the heart and help sadhana to succeed! (Divine Discourse, May 10, 1969)
THE COMPANY OF THE GOOD TAKES YOU NEAR TO GOD. SADHANA MAKES YOU DEAR TO THE LORD.WHEN YOU ARE NEAR AND DEAR, YOU BECOME ONE WITH GOD. - BABA
பிரபஞ்சத்தின் அடிப்படை உண்மையான ‘’இருத்தல்’’ என்பதே ஸத் என்ற தத்துவம் ஆகும். ஞானம் எனும் ஓளியைக் காணாத மனங்கள், எந்த ஸத்யா (உண்மை நிலை) மீது, மித்யாவைத் (பொய்மையைத்) திணிக்கிறார்களோ, அந்த சத்தியத்தோடு உங்களுள் உள்ள ஸத்தை ஒன்றிணையுங்கள். ஸத்தின் மீது தியானிப்பதன் மூலம், ஜோதி ஏற்றப்படுகிறது, ஒளி பிறக்கிறது, இருட்டு மறைகிறது, ஞான பாஸ்கரா (ஆத்ம சாக்ஷாத்காரம் எனும் சூரியன்) உதயமாகிறது. கீழே கடினமான பாறை இருந்தால், நீங்கள் பூமிக்கடியில் இருக்கும் சுத்தமான நீரை வெளிக் கொண்டு வர, மேலும் ஆழமாகத் துளை இட வேண்டும். அடி மண் மிருதுவாக இருந்தால், வெற்றியை வேகமாகப் பெற முடியும். உங்கள் இதயத்தை மிருதுவாக்கிக் கொள்ளுங்கள்; பின்னர் ஆன்மிக சாதனையில் வெற்றி விரைவாகக் கிடைக்கும். இதமாகப் பேசுங்கள், இனிமையாகப் பேசுங்கள், இறைவனைப் பற்றி மட்டுமே பேசுங்கள் - அதுவே அடி மண்ணை மிருதுவாக்கும் முறையாகும். பரிவையும் கனிவையும் வளர்த்துக் கொள்ளுங்கள்; சேவையில் ஈடுபட்டு, ஏழ்மை, வியாதி, துன்பம் மற்றும் துயரத்தின் வேதனையைப் புரிந்து கொள்ளுங்கள்; கண்ணீர் மற்றும் குதூகலம் என்ற இரண்டையும் பிறருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அதுவே இதயத்தை மிருதுவாக்கி, ஆன்மிக சாதனையை வெற்றி பெற உதவும் வழியாகும்.
நல்லோர்களின் நட்பு வட்டம் உங்களை இறைவனுக்கு அருகில் கொண்டு செல்கிறது.ஆன்மிக சாதனை உங்களை இறைவனுக்குப் பிரியமானவராக ஆக்குகிறது. நீங்கள் அருகிலும், பிரியமானவராகவும் ஆகும் போது,நீங்கள் இறைவனோடு ஒன்றாக ஆகி விடுகிறீர்கள் - பாபா