azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 22 Dec 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 22 Dec 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

What is Sadhana, fundamentally? It is upavasam, upasana. ‘Upa’ means near, ‘Asana’ means sitting, and ‘Vasam’ means residing. We sit near a cooler so that we may feel cool. We sit near God, so that we might derive some Godly qualities and get rid of ungodly characteristics. God is not an external contrivance or convenience like the air cooler. He is the Antaryamin, the Inner Director, the Inner Reality, the Unseen Basis on which all this seeable world is built. He is like the fire-principle that is latent in wood, which can be made manifest, when one piece is rubbed vigorously against another. The heat that is produced consumes the wood in fire! Satsang (Company of the good and the godly) makes you meet with other individuals of like nature, and creates the contact that manifests the Inner Fire. Sat-sang means meeting the Sat, the Sat (Truth) which is spoken of while extolling God as Sat-chit-ananda. (Divine Discourse, May 10, 1969)
FILL YOUR MIND WITH THOUGHTS OF GOD. ENGAGE YOURSELF IN GODLY ACTIONS.
THIS IS TRUE SADHANA. - BABA
அடிப்படையில் ஆன்மிக சாதனை என்றால் என்ன? அதுவே உபவாஸம், உபாஸனா. ‘’ உப’’ என்றால் அருகில், ‘’ அஸனா’’ என்றால் அமருவது மற்றும் ‘’வாஸம்’’ என்றால் குடி இருப்பது. நாம் ஒரு குளிர்சாதனக் கருவியின் அருகில் குளிர்ச்சியாக இருப்பதற்காக அமருகிறோம். நாம், இறைவனது குணாதிசியங்களில் சிலவற்றைப் பெற்றுக் கொள்வதற்கும், இறைத் தன்மைக்கு எதிரான சில குணங்களை விட்டு விடுவதற்காகவும், இறைவன் அருகில் அமருகிறோம். இறைவன் குளிர்சாதனக் கருவியைப் போன்று வெளிப்புறத்தில் உள்ள ஒரு கருவியோ அல்லது சௌகரியமோ அல்ல. அவன் அந்தர்யாமின், அக இயக்குனர், உள்ளார்ந்த உண்மை நிலை, கண் முன் தோன்றும் அனைத்து உலகமும் எந்த ஆதாரத்தில் கட்டப்பட்டுள்ளதோ, அந்த கண்ணுக்குப் புலப்படாத ஆதாரமானவன். ஒரு கட்டையை மற்றொரு கட்டையோடு வேகமாக உரசினால் வெளிப்படும், மரத்தில் மறைந்து நிற்கும் அக்னி தத்துவம் போன்றவன் அவன். அதிலிருந்து உருவாக்கப்படும் வெப்பம் அந்த மரத்தையே நெருப்பிற்கு இரையாக்கி விடுகிறது! ஸத்ஸங்கம் (நல்ல மற்றும் இறைப் பற்றுள்ளவர்களின் நட்பு வட்டம்) உங்களை ஒரே மாதிரியான இயல்பு உள்ளவர்களைச் சந்திக்க வைத்து, அக அக்னியை வெளிக்கொண்டு வரும் உறவை ஏற்படுத்தி விடுகிறது. ஸத்-ஸங்கம் என்றால், ஸத்தைச் (சத்தியத்தை) சந்திப்பது, அதாவது இறைவனை ஸத் சித் ஆனந்தன் எனப் போற்றுகிற போது பேசப்படும் அந்த ஸத்தை சந்திப்பது என்பதே.
உங்கள் மனதை இறைச் சிந்தனைகளால் நிரப்புங்கள்.உங்களை நீங்களே இறைமயமான செயல்களில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். இதுவே உண்மையான ஆன்மிக சாதனை- பாபா