azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 20 Dec 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 20 Dec 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

Without firm faith in the omnipresence of the Divine, devotion has no meaning. By developing faith, devotion is nourished and devotion enables one to face all the vicissitudes of life with fortitude and serenity, regarding them as dispensations of Providence. Finally one-pointed devotion for God leads to union with the Divine. Today devotion begins with the morning ritual of yoga (a form of worship), progresses towards bhoga (enjoyment) at mid-day and ends with roga (sickness) at night. "Satatam Yoginah," says the Gita. To be absorbed in the Divine always is the mark of a yogi. This cannot be achieved in one jump. But can be achieved through constant practice. Self-realisation is the goal. Love is the means. It is through the cultivation of Love that life can find fulfilment. Everyone must strive to achieve this fulfilment by filling this human adventure with the sweetness of love and transforming it into an expression of Divinity. This is My benediction for all of you. (Divine Discourse, Jan 19, 1986)
EVEN THOSE WHO DENY GOD WILL TREAD THE PILGRIM ROAD,
MELTING THEIR HEARTS OUT IN TEARS OF TRAVAIL. - BABA
இறைவன் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கிறான் என்பதில் உறுதியான நம்பிக்கை இல்லாவிட்டால், பக்திக்கு அர்த்தமே இல்லை. நம்பிக்கையை வளர்த்துக் கொள்வதன் மூலம் பக்தி பேணப்படுகிறது; பக்தி, வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகளை, அவற்றை இறைவனின் பிரசாதங்கள் எனக் கருதி மனத்திண்மை மற்றும் அமைதியோடு ஒருவரை எதிர்கொள்ள வைக்கிறது. இறுதியாக, இறைவன் மீதான ஒரு முனைப்பான பக்தி, இறைவனுடன் இரண்டற சங்கமம் ஆவதற்கு இட்டுச் செல்கிறது.இன்றோ பக்தி, காலைச் சடங்கான யோகாவில் தொடங்கி, மதியத்தில் போகத்தை (இன்பத்தை அனுபவித்தல்) நோக்கி முன்னேறி, இரவில் ரோகத்தில் ( வியாதியில்) முடிகிறது. ‘’ஸததம் யோகினஹ’’ என்கிறது ஸ்ரீமத் பகவத் கீதை. இறைவனில் எப்போதும் மூழ்கி இருப்பதே ஒரு யோகிக்கான லட்சணம் ஆகும். இதை ஒரே தடவையில் சாதித்து விட முடியாது. ஆனால், இடையறாத பயிற்சியின் மூலம் இதை சாதிக்க முடியும். ஆத்ம சாக்ஷாத்காரமே குறிக்கோள். ப்ரேமையே இதற்கான வழி. ப்ரேமை வளர்த்துக் கொள்வதன் மூலமே வாழ்க்கை பூரணத்துவம் அடைய முடியும். இந்த மனித சாகசத்தை அன்பின் இனிமையால் நிரப்பி, அதை தெய்வீகத்தின் வெளிப்பாடாக மாற்றுவதன் மூலம் இந்த பூரணத்துவத்தை அடைய அனைவரும் முயற்சிக்க வேண்டும். இதுவே, உங்கள் அனைவருக்குமான எனது ஆசீர்வாதம் ஆகும்.
இறைவனை மறுப்பவர்களும் கூட, வேதனையின் கண்ணீரால், அவர்களது இதயங்களை உருகச் செய்து கொண்டே, இறைவனை நோக்கிய தீர்த்த யாத்திரைப் பாதையில் செல்வார்கள்- பாபா