azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 17 Dec 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 17 Dec 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

One should never speak ill of others. Mounat kalaham nasti (strife does not arise out of silence). Salute those who offend you. Don’t return offence with offence. If you act in the same manner as your opponent, how can you become greater? While saying that the other is acting wrongly, will you be right if you act in the same manner? Never act in this manner. Let those who commit offence continue their offensive behaviour. Never react. Wish for the welfare of everyone. When all are happy, you are included. We pray for the welfare, wealth, and health of all. Never wish for the misfortune of any other person. There is no room for hatred in this world. All are friends. If you persist in this manner, wishing well for everyone, and praying for their prosperity, you become an ideal for the whole world. (Divine Discourse, Mar 12, 2002)
REAL SILENCE IS NEVER SPEAKING ILL OF OTHERS. - BABA
ஒருவர் பிறரைப் பற்றி ஒருபோதும் அவதூறாகப் பேசக் கூடாது. மௌனாத் கலஹம் நாஸ்தி (மௌனமாக இருந்தால் கலகம் இல்லை). உங்களைத் தூற்றுபவர்களுக்கு வந்தனம் சொல்லுங்கள். அடிக்கு, பதிலடி கொடுக்காதீர்கள். உங்கள் எதிரியைப் போலவே நீங்களும் நடந்து கொண்டால், நீங்கள் எப்படிச் சிறந்தவராக ஆக முடியும்? மற்றவர் தவறாக நடந்து கொள்கிறார் என்று கூறிக் கொண்டே, நீங்களும் அவ்வாறே நடந்து கொள்வது சரியாகுமா? இவ்வாறு ஒருபோதும் நடந்து கொள்ளாதீர்கள்.தவறாக நடந்து கொள்பவர்கள், அவர்களது தவறான நடத்தையை தொடரட்டும். ஒரு போதும் எதிர்த்து நடந்து கொள்ளாதீர்கள். அனைவரது நலனையும் விரும்புங்கள். அனைவரும் சந்தோஷமாக இருந்தால்,நீங்களும் கூட அதில் சேர்ந்தவரே. நாம் அனைவரது நலன், வளம் மற்றும் ஆரோக்கியத்திற்காக பிரார்த்திக்கிறோம். வேறு எந்த நபரின் துரதிர்ஷ்டத்தையும் ஒருபோதும் விரும்பாதீர்கள்.இந்த உலகில் வெறுப்பிற்கு இடமே இல்லை. அனைவரும் நண்பர்களே. நீங்கள் இவ்வாறு தொடர்ந்து நடந்து கொண்டு, அனைவருக்கும் நல்லதையே விரும்பிக் கொண்டு, அவர்களது வளத்திற்காகப் பிரார்த்தித்துக் கொண்டு இருந்தால், நீங்கள் உலகனைத்திற்கும் ஒரு இலட்சிய மனிதராக ஆகி விடுவீர்கள்.
பிறரைப் பற்றி ஒருபோதும் அவதூறாகப் பேசாமல் இருப்பதே
உண்மையான மௌனம் ஆகும்- பாபா