azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 11 Dec 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 11 Dec 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

Children are fresh charming saplings. With care and love, they can be made to blossom into ideal citizens of this land who can understand and practise the great disciplines laid down by the sages for their liberation, through self-realisation. The parents must bear a major share of the responsibility for the proper upbringing of children. The earliest years of life are the most crucial. The skills, attitudes, emotions, and the impulses that make or mar the future are built into the foundation of life in those years. Parents can help or hinder in the process of making that foundation strong and straight. But parents have no equipment now for this basic role. They have no faith in their own ancient culture; they themselves have no mental peace or sadhana which the children can imbibe from them. Children must grow up in homes, where their parents honour their parents, and are happy only when they serve their elders. This must be taught to them by example, rather than by precept! (Divine Discourse, Jan 19, 1969)
PARENTS HAVE THE PRIMARY RESPONSIBILITY TO MOULD THE CHARACTER OF CHILDREN.
TOO MUCH FREEDOM SHOULD NOT BE GIVEN OUT OF EXCESSIVE AFFECTION. - BABA
குழந்தைகள் புத்துணர்ச்சி கொண்ட அழகான மரக்கன்றுகள். அக்கறையுடனும், அன்புடனும், இந்த தேசத்தின் சிறந்த குடிமக்களாக அவர்களை மலர வைக்க முடியும்; முனிவர்கள், அவர்களது விடுதலைக்காக வகுத்துள்ள சிறந்த ஒழுக்கங்களை ஆத்ம சாக்ஷாத்காரத்தின் மூலம், அவர்கள் புரிந்துகொண்டு கடைப்பிடிக்க முடியும். குழந்தைகளை முறையாக வளர்ப்பதற்கான பொறுப்பில் பெற்றோர்கள் ஒரு பெரும் பங்கை ஏற்க வேண்டும். வாழ்க்கையின் ஆரம்ப ஆண்டுகள் மிகவும் முக்கியமானவை. எதிர்காலத்தை அமைக்கும் அல்லது அழிக்கும், திறன்கள், அணுகுமுறைகள், உணர்ச்சிகள் மற்றும் தூண்டுதல்கள் அந்த ஆண்டுகளில் வாழ்க்கையின் அடித்தளமாக கட்டமைக்கப்படுகின்றன. அந்த அடித்தளத்தை வலுவாகவும் நேராகவும் மாற்றுவதற்கான செயல்பாட்டில் பெற்றோர்கள் உதவலாம் அல்லது தடையாக இருக்கலாம். ஆனால் இந்த அடிப்படைப் பங்கை ஆற்றுவதற்கான உபகரணங்கள் பெற்றோரிடம் இப்போது இல்லை. தங்கள் சொந்த பண்டைய கலாச்சாரத்தில் அவர்களுக்கே நம்பிக்கை இல்லை; அவர்களிடமிருந்து குழந்தைகள் கற்றுக் கொள்ளக்கூடிய மன அமைதி அல்லது ஆன்மிக சாதனை அவர்களிடமே இல்லை. எங்கு பெற்றோர்கள் அவர்களது பெற்றோரை மதித்து, மூத்தவர்களுக்கு சேவை செய்யும் போது மட்டுமே மகிழ்ச்சி அடைகிறார்களோ, அப்படிப் பட்ட இல்லங்களிலேயே குழந்தைகள் வளர வேண்டும், இது அவர்களுக்கு கட்டளை மூலம் அல்லாமல் உதாரணம் மூலம் கற்பிக்கப்பட வேண்டும்!
குழந்தைகளின் குணநலனை உருவாக்குவதில், பெற்றோர்களுக்கு தலையாய கடமை உள்ளது.அளவுக்கு மீறிய பாசத்தின் காரணமாக, மிகவும் அதிகமான சுதந்திரத்தைக் கொடுக்கக் கூடாது- பாபா