azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 09 Dec 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 09 Dec 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

Sadhana (spiritual efforts) must make you calm, unruffled, poised, and balanced. Make the mind as cool and comforting as moonlight, for the Moon is the Deity holding sway over the mind. Be calm in speech, and in your response to malice, cavilling and praise. You complain that others are disturbing your equanimity; but you do not know that though your tongue does not speak, your thoughts can unsettle the equanimity of those around you. Detachment, Faith and Love - these are the pillars on which peace rests. Of these, faith is crucial. For without it, all Sadhana is an empty rite. Detachment alone can make Sadhana effective, and love leads one quickly to God. Faith feeds the agony of separation from God, detachment canalises it along the path of God and Love lights the way. God will grant you what you need and deserve; there is no need to ask and no reason to grumble, be content. Nothing can happen against His will! (Divine Discourse, Jan 13, 1969)
YOU MUST SUBJECT YOURSELF TO THE HAMMER OF DISCIPLINE
AND THE CHISEL OF PAIN-PLEASURE, SO THAT YOU BECOME DIVINE. - BABA
ஆன்மிக சாதனை உங்களை சாந்தமானவராக, நிலைகுலையாதவராக, கம்பீரமானவராக, சமச்சீரானவராக ஆக்க வேண்டும்.சந்திரனே மனதின் போக்கைக் கட்டுப்படுத்தும் தேவதையாக இருப்பதால், உங்கள் மனதை நில ஒளியைப் போல குளுமையாகவும், இதமானதாகவும் ஆக்கிக் கொள்ளுங்கள். பேசும் போதும், வன்மம், தூற்றுதல் மற்றும் போற்றுதல் ஆகியவற்றிற்கு பதிலளிக்கும் போதும் அமைதியாக இருங்கள். மற்றவர்கள் உங்களது சமச்சீரான மனப்பாங்கைக் குலைக்கிறார்கள் என்று குறை கூறுகிறீர்கள்; ஆனால், உங்கள் நாக்கு பேசாமல் இருந்தாலும் கூட,உங்கள் சிந்தனைகள் சுற்றி இருப்பவர்களின் சமச்சீரான மனப்பாங்கினை குலைக்கக் கூடும் என்பதை நீங்கள் அறிவதில்லை.பற்றின்மை, இறைநம்பிக்கை மற்றும் ப்ரேமை -இவையே சாந்தியைத் தாங்கி நிற்கும் தூண்களாகும்.இவற்றில் இறைநம்பிக்கை மிகவும் முக்கியமானதாகும்.அது இன்றி அனைத்து ஆன்மிக சாதனையும் ஒரு வெற்றுச் சடங்கே. பற்றின்மையே ஆன்மிக சாதனையை பயனுள்ளதாக ஆக்குகிறது; ப்ரேமை ஒருவரை இறைவன் பால் விரைவாக இட்டுச் செல்கிறது. இறை நம்பிக்கை, இறைவனைப் பிரிந்து இருப்பதன் வேதனையை அதிகரிக்கிறது; பற்றின்மை அதை இறைவனை நோக்கிய பாதையில் செலுத்துகிறது; மேலும் ப்ரேமை அதற்கு வெளிச்சமிட்டு வழி காட்டுகிறது. உங்களுக்குத் தேவையானதையும் தகுதியானதையும் இறைவன் உங்களுக்கு அளிப்பார்; எதையும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை; புலம்புவதற்கான எந்தக் காரணமும் இல்லை; திருப்தியுடன் இருங்கள். இறைவனது ஸங்கல்பத்திற்கு எதிராக எதுவும் நிகழாது!
நீங்கள் தெய்வீகமாவதற்கு, நீங்கள் உங்களையே கட்டுப்பாடு என்ற சுத்தியலுக்கும், சுக -துக்கம் என்ற உளிக்கும் ஆளாக்கிக் கொள்ள வேண்டும். - பாபா