azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 06 Dec 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 06 Dec 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

Every morning, as soon as you sit up in bed, ask yourself this question: "For what purpose have I come into this world? What is the task set for me? What is the triumph for which this struggle is preparing me? Which is the grand victory for which I have to strive?" You must’ve witnessed chariot festivals in famous pilgrimage centres. The colossal chariots will be gorgeously decorated; stalwart bands of men draw them along broad roads to the music of blowpipes and conches; acrobats, dancers, chanters, minstrels - all precede it and add to the exhilaration of the occasion. Thousands crowd around and their attention is naturally drawn towards entertainments provided, but they feel happiest only when they fold their palms and bow before the Idol installed in the chariot. The rest is all subsidiary, even irrelevant! So too in the process of life, body is the chariot, Atma is the Idol installed therein. Earning, spending, laughing, weeping, hurting, healing, and all the various acrobatics of daily life are but subsidiary to the adoration of God, the attainment of Atma! (Divine Discourse, Jan 13, 1969)
THE REALISATION OF GOD IS THE GOAL AND DESTINY OF HUMAN LIFE. - BABA
ஒவ்வொரு நாள் காலையிலும், நீங்கள் படுக்கையில் எழுந்து உட்கார்ந்தவுடன், ‘’நான் எந்த குறிக்கோளுக்காக இந்த உலகில் வந்து இருக்கிறேன்? எனக்கென்று ஒதுக்கப்பட்ட பணி என்ன? எந்த சாதனைக்காக இந்தப் போராட்டம் என்னைத் தயார் செய்து கொண்டு இருக்கிறது? எந்த மகத்தான வெற்றிக்காக, நான் பாடுபட வேண்டும்?‘’என்ற கேள்வியை, உங்களுக்கு நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். நீங்கள் புகழ் வாய்ந்த தீர்த்த யாத்திரைத் தலங்களில் தேர் திருவிழாக்களைக் கண்டிருப்பீர்கள். பிரம்மாண்டமான தேர்கள் அழகாக அலங்கரிக்கப் பட்டு இருக்கும்;நாதஸ்வரங்களும், சங்குகளும் முழங்க, திடகாத்திரமான ஆண்கள் கோஷ்ட்டிகளாக ஒன்று சேர்ந்து, விசாலமான தெருக்களின் வழியாக, அவற்றை இழுத்துச் செல்வார்கள்;கழைக்கூத்தாடிகள், நடனக் கலைஞர்கள்,வேதம் ஓதுபவர்கள், இசைக்கலைஞர்கள் என அனைவரும் முன் சென்று, இந்த நிகழ்ச்சியின் உற்சாகத்தை அதிகமாக்குவார்கள். கூடி இருக்கும் ஆயிரக்கணக்காணோரின் கவனம் இயல்பாகவே, அங்கு நிகழும் கொண்டாட்டங்களின் மீது ஈர்க்கப்பட்டாலும் கூட,தேரில் கொலு வீற்றிருக்கும் இறைவனது விக்ரஹத்தின் முன், கரம் குவித்து வணங்கும் போது மட்டுமே, அவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள். மீதம் அனைத்தும் கூட வருபவையே, ஏன் பொருத்தமற்றவையும் கூட! அதைப் போலவே, வாழ்க்கை முறையிலும், உடலே தேர், ஆத்மாவே அதில் கொலு வீற்றிருக்கும் இறைவனது விக்ரஹம். பணம் ஈட்டுவது, செலவிடுவது, சிரிப்பது, அழுவது, காயப்படுத்துவது, குணமாவது, மேலும் அன்றாட வாழ்க்கையின் அனைத்து கழைக்கூத்தாடி வேலைகளும், இறைவனைப் போற்றி, ஆத்மாவை அடைவதற்குத் துணையாக இருப்பவையே அன்றி வேறில்லை!
இறைவனை உணருவதே மனித வாழ்க்கையின்
குறிக்கோளும், விதியும் ஆகும்- பாபா