azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 04 Dec 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 04 Dec 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

The mind is the puppet of the food that is consumed by man. It is prompted one way or the other by the subtle pull of the food it is fed on. The quality of the food determines the direction of the desire that diverts the mental flow. That is why in the Gita as well as in all scriptural texts, Satwik (pure) food is recommended for the upward seeking individual. Satwik food, according to some, consists in milk and fruits. But it is much more; it may not even be these. For, the calories that one takes in through the mouth are but a small part of the intake of man. The intake by the senses are part of the food that builds the individual. The sounds heard, the sights seen, the tactile impressions sought or suffered, the air breathed, the environment that presses for attention, appreciation and adoption - all these are 'food.' They have considerable impact on the character and career of the individual. (Divine Discourse, Jan 28, 1971.)
AS IS THE FOOD, SO IS THE HEAD. MAN’S THOUGHTS, DESIRES, AND ASPIRATIONS
ARE RELATED TO THE KIND OF FOOD HE CONSUMES. - BABA
மனம் என்பது, மனிதன் உண்ணும் உணவின் கைப்பாவையே. அதற்கு ஊட்டப்படும் உணவின் சூக்ஷ்மமான இழுப்பினால், ஒரு வழியிலோ அல்லது மற்றொரு வழியிலோ அது தூண்டப்படுகிறது. உணவின் தன்மை, மன ஓட்டத்தைத் திருப்பும் ஆசையின் திசையை முடிவு செய்கிறது. அதனால் தான், ஸ்ரீமத் பகவத் கீதை மற்றும் அனைத்து ஆன்மிக நூல்களிலும், உயர் நிலையை நாடும் மனிதனுக்கு, சாத்வீகமான உணவு பரிந்துரைக்கப் பட்டுள்ளது.சிலர் , சாத்வீக உணவு என்றால், பாலும், பழங்களும் என்பார்கள். ஆனால், அது அவற்றை விடவும் அதிகமானது; அது இவை எல்லாமும் கூட இல்லாமல் இருக்கலாம். ஒருவர் வாய் வழியாக எடுத்துக் கொள்ளும் சக்திகள், மனிதன் உட்கொள்ளுபவற்றின் ஒரு சிறிய பகுதியே அன்றி வேறில்லை. புலன்களின் மூலம் உட்கொள்ளுபவையும், ஒரு மனிதனை உருவாக்கும் உணவின் பகுதியே. கேட்ட ஒலிகள், பார்த்த காட்சிகள், தேடிய அல்லது அனுபவித்த தொட்டுணரக்கூடிய பதிவுகள், சுவாசித்த காற்று, கவனத்தை ஈர்க்கும் சூழல், பாராட்டு மற்றும் ஏற்றுக்கொண்டவை - இவை அனைத்துமே 'உணவு' தான். அவை தனி மனிதனின் குணநலன் மற்றும் தொழில் வாழ்க்கையில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
உணவு எப்படியோ,உள்ளம் அப்படியே.மனிதனது சிந்தனைகள், ஆசைகள் மற்றும் ஏக்கங்கள், அவன் உண்ணும் உணவின் தன்மையைப் பொறுத்ததே- பாபா