azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 01 Dec 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 01 Dec 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

Embodiments of Love! Eschew bad qualities like hatred and envy. See that your love for God does not fluctuate according to whether your wishes are fulfilled or not. Remember that you reap the fruits of your actions, according to whether they are good or bad. Love of God alone can confer enduring bliss. Many in the world acquire wealth, fame and position. But what have they achieved in terms of the goal of life? Their failure is due to lack of understanding of the unity that underlies the apparent diversity. It is a mark of spiritual goodness to recognise the divine in everyone. Prahlada declared that you can find God wherever you seek Him. His father, Hiranyakasipu, was a great person because of his attainments. But he failed to achieve goodness because of his denial of the Divine. The lesson for students today is that they should follow the sacred path of righteousness. They should work for the welfare of society. (Divine Discourse, Jan 1, 1998)
THE PERSON DEVOTED TO GOD KNOWS NO FAILURE. THE NAME OF THE LORD,
IF TAKEN SINCERELY OVERCOMES ALL OBSTACLES. - BABA
ப்ரேமையின் திருவுருவங்களே! தீய குணங்களான வெறுப்பு மற்றும் பொறாமையைத் தவிர்த்து விடுங்கள்.இறைவன் பால் நீங்கள் வைத்துள்ள ப்ரேமை ,உங்களது விருப்பங்கள் நிறைவேறுகின்றனவா அல்லது இல்லையா என்பதைப் பொறுத்து ஊசலாடாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அவை நல்லவையா அல்லது கெட்டவையா என்பதைப் பொறுத்து, உங்களது செயல்களின் பலன்களை நீங்கள் அறுவடை செய்தே ஆக வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.இறைவன் பால் கொள்ளும் ப்ரேமை மட்டுமே நிரந்தரமான ஆனந்தத்தை அளிக்க முடியும். உலகில் பலர், செல்வம், புகழ் மற்றும் அந்தஸ்தை சம்பாதிக்கிறார்கள். ஆனால், வாழ்க்கையின் குறிக்கோளைப் பொறுத்த வரை அவர்கள் சாதித்தது என்ன? அவர்களது தோல்வி, வெளிப்படையான வேற்றுமையின் அடிப்படையில் உள்ள ஒற்றுமையைப் பற்றிய புரிதல் இல்லாமையினாலேயே.ஒவ்வொருவருள்ளும் தெய்வீகத்தை உணருவது ஆன்மிக நன்மையின் ஒரு அடையாளச் சின்னமாகும். பக்த பிரஹலாதன், நீங்கள் எங்கு தேடினாலும், அங்கு இறைவனைக் காணலாம் எனப் பறை சாற்றினான்.அவனது தந்தையான ஹிரண்யகசிபு, அவனது சாதனைகளின் காரணமாக, மிக உயர்ந்தவனாக இருந்தான். ஆனால், அவன் இறைவனை மறுத்ததால், நல்லவற்றை அடைவதில் தோல்வி அடைந்தான். நீங்கள் தார்மீகமான பாதையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே,இன்றைய மாணவர்களுக்கான பாடமாகும். அவர்கள், சமுதாயத்தின் நலனுக்காக உழைக்க வேண்டும்.
இறைவனது பக்தன் தோல்வியையே அறியாதவன். உளமாற ஏற்றுக் கொள்ளப் பட்டால்,இறைவனது திருநாமம் அனைத்து தடைகளையும் வென்று விடும்- பாபா