azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 30 Nov 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 30 Nov 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

The Chakora bird is an example for man in the pursuit of purity. It will not drink any water except what rains from a cloud in the sky. It sees in a dark rain-bearing cloud the divine form of the Lord. Man should seek to see and experience the Divine in every object and every being. Students should experience the Divine in all their studies and sports. It has been said: Life is a game, Play it! Life must be permeated with love. Through love, truth can be realised and a righteous life can be lived. The cowherd maids (Gopikas) provide the supreme example of how to lead a life dedicated to the Divine. The episode of Uddhava’s mission to the cowherd maids and their reaction to it as described in the Bhagavatam shows what true and one-pointed devotion to Krishna meant for the cowherd maids. They had totally surrendered their minds and hearts to Krishna. (Divine Discourse, Jan 14, 1998)
MEN AND WOMEN SHOULD STRIVE TO LEAD VIRTUOUS LIVES. - BABA
பரிசுத்தத்தை நாடும் மனிதனுக்கான ஒரு உதாரணம் சகோரப் பறவை. அது, வானத்திலிருந்து ஒரு மேகம் பொழியும் நீரைத் தவிர வேறு எந்த நீரையும் அருந்தாது. அது, மழையைத் தாங்கி நிற்கும் ஒரு கரு மேகத்தில் இறைவனது தெய்வீக ரூபத்தைக் காண்கிறது. மனிதனும், ஒவ்வொரு பொருள் மற்றும் ஒவ்வொரு ஜீவராசியிலும் இறைவனைக் கண்டு அனுபவிப்பதை நாட வேண்டும். மாணவர்கள் அவர்களது அனைத்து பாடங்கள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் தெய்வீகத்தை அனுபவிக்க வேண்டும். வாழ்க்கை ஒரு விளையாட்டு, அதை விளையாடு எனக் கூறப்படுகிறது. வாழ்க்கை ப்ரேமையில் தோய்ந்திருக்க வேண்டும் ப்ரேமையின் மூலம் சத்தியத்தை உணர முடிந்து, ஒரு தார்மீகமான வாழ்க்கையை வாழ முடியும். தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வாழ்க்கையை எவ்வாறு நடத்துவது என்பதற்கு கோபிகைகளே தலை சிறந்த உதாரணம் ஆவார்கள். ஸ்ரீமத் பாகவதத்தில் வர்ணிக்கப்படும், கோபிகைகளிடம் உத்தவர் சென்ற தூதும், அதற்கு அவர்களது பதிலும், கோபிகைகளுக்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பால் இருந்த உண்மையான மற்றும் ஒரு முகப்பான பக்தி எது என்பதைக் காட்டுகிறது. அவர்கள் தங்களது மனங்கள் மற்றும் இதயங்களை பரிபூரணமாக பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் சரணாகதி அடையச் செய்து விட்டிருந்தார்கள்.
ஆண்களும், பெண்களும் நல்லொழுக்க சீலமான
வாழ்க்கைகளை நடத்தப் பாடுபட வேண்டும் - பாபா