azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 29 Nov 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 29 Nov 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

We witness in the world all kinds of pains and sorrows. But none of these is permanent. Every pain is followed by pleasure. The experience of pleasure is refined by the earlier experience of pain. Like refinement of gold by melting in a crucible, pain divinises pleasure that follows it! In daily life, we tend to treat defeat, loss or grief as calamities. But, nothing occurs in the world without a cause. Hunger is the cause for eating. Thirst is the cause for drinking. Difficulties are the cause of sorrow. If man is to enjoy enduring happiness, he must discover the source of such happiness. That source is love. There is nothing greater than love. Everything has a price. The price to be paid for enduring happiness is Divine Love. Without Love, no object can give you real happiness. Hence, primary wealth for man is Love. Everyone should acquire this wealth. With this wealth anyone can enjoy enduring bliss! (Divine Discourse, Jan 1, 1998)
YOU MUST SUBJECT YOURSELF TO THE HAMMER OF DISCIPLINE AND
THE CHISEL OF PAIN-PLEASURE, SO THAT YOU BECOME DIVINE. - BABA
நாம், உலகில் பல விதமான துக்கங்களையும், துயரங்களையும் பார்க்கிறோம். ஆனால், இவை எதுவுமே நிரந்தரமானவை அல்ல.ஒவ்வொரு துன்பத்தையும் தொடர்ந்து பின் வருவது இன்பமே.இன்பத்தின் அனுபவம், முன்பு அனுபவித்த துன்பத்தால் சீரியதாக்கப் படுகிறது.ஒரு உலையில் இட்டு உருக்கி சுத்திகரிக்கப் படும் தங்கத்தைப் போல, துன்பம், அதைத் தொடர்ந்து பின் வரும் இன்பத்தை தெய்வீகமாக்குகிறது ! அன்றாட வாழ்க்கையில் நாம் தோல்வி, நஷ்டம் அல்லது துயரத்தை, பேரிடர்களாகக் கருதுகிறோம். ஆனால், இந்த உலகில் எதுவும் ஒரு காரணமின்றி நிகழ்வதில்லை. உண்பதற்குக் காரணம் பசியே. நீர் அருந்துவதற்குக் காரணம் தாகமே. இடர்களே, துயரத்திற்கான காரணம். மனிதன் நிரந்தரமான சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டும் என்றால், அவன், அந்த சந்தோஷத்தின் மூலாதாரத்தைக் கண்டு பிடிக்க வேண்டும். அந்த மூலாதாரமே ப்ரேமை. ப்ரேமையை விட உயர்ந்தது எதுவுமே இல்லை. ஒவ்வொன்றிற்கும் ஒரு விலை இருக்கிறது. நிரந்தரமான சந்தோஷத்தின் விலை தெய்வீக ப்ரேமையே. ப்ரேமை இன்றி எந்தப் பொருளும் உங்களுக்கு உண்மையான சந்தோஷத்தைத் தர முடியாது. எனவே, மனிதனின் முதன்மையான செல்வம் ப்ரேமையே. ஒவ்வொருவரும் இந்த செல்வத்தை ஈட்ட வேண்டும்.இந்த செல்வத்தின் மூலம் எவர் வேண்டுமானாலும், நிரந்தரமான ஆனந்தத்தை அனுபவிக்க முடியும் !
நீங்கள் தெய்வீகமாவதற்கு, நீங்கள் உங்களையே கட்டுப்பாடு என்ற சுத்தியலுக்கும், சுக -துக்கம் என்ற உளிக்கும் ஆளாக்கிக் கொள்ள வேண்டும். - பாபா