azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 28 Nov 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 28 Nov 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

Once, while Pandavas were in the forest, Krishna visited them. Krishna was told that the five brothers took turns during the night to keep a vigil over the activities of evil spirits and demons. One night, an evil spirit appeared before Pandava brothers, they had great difficulty in fighting it. In view of this, Dharmaja, the eldest Pandava, tried to dissuade Krishna from participating in sentry duty. Krishna, however, insisted on his share. During that period no evil spirit appeared. Then came Arjuna’s turn, Krishna watched the scene from a distance. To Arjuna’s surprise, no evil spirit appeared while Krishna was there. Krishna then explained to Arjuna that evil spirits were only a reflection of one’s hatred and fear, and when one is free from these, no evil spirit would appear or do any harm. Krishna revealed that the Divine existed even in so-called evil spirits and that if a person gets rid of the evil qualities within him, evil spirits can do no harm. (Divine Discourse, Jan 14, 1998)
ONE’S OWN ANGER ASSUMES THE FORM OF A DEMON. IF YOU DEVELOP LOVE,
THEN, EVERYTHING YOU CONFRONT WILL HAVE THE FORM OF LOVE. - BABA
பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்த போது, ஒருமுறை, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவர்களைச் சந்தித்தார். இரவு நேரத்தில், துர் தேவதைகள் மற்றும் அசுரர்களின் செயல்பாடுகளுக்கு எதிராக காவல் காக்கும் பணியை, ஐந்து சகோதர்களும் ஒருவர் மாற்றி ஒருவர் செய்து வருவதாக ஸ்ரீகிருஷ்ணருக்குக் கூறப்பட்டது.ஒரு இரவு,ஒரு துர்தேவதை, பாண்டவ சகோதரர்களுக்கு முன்னால் தோன்றிய போது, அதனுடன் போராடுவது அவர்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது. இதன் காரணமாக, பாண்டவர்களின் மூத்தவரான தர்மராஜர், இந்தக் காவல் பணியில் பங்கேற்பதை ஸ்ரீ கிருஷ்ணர் தவிர்க்க வேண்டும் என முயற்சி செய்து பார்த்தார். ஆனால், தனது பங்கை ஆற்றுவதை ஸ்ரீகிருஷ்ணர் வலியுறுத்தினார். அந்த நேரத்தில் எந்தத் துர்தேவதையும் தோன்றவில்லை. பின்னர், அர்ஜூனனின் முறை வந்தது. ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு தூரத்திலிருந்து அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டு இருந்தார். ஸ்ரீகிருஷ்ணர் இருந்தவரை எந்த துர்தேவதையும் தோன்றவில்லை என்பதைக் கண்டு அர்ஜூனன் ஆச்சரியம் அடைந்தான். துர்தேவதைகள், ஒருவரது வெறுப்பு மற்றும் பயத்தின் ஒரு ப்ரதிபலிப்புகளே என்றும் ஒருவர் இவை இன்றி இருக்கும் போது, எந்த துர்தேவதையும் தோன்றவோ அல்லது தீங்கு விளைவிக்கவோ செய்யாது என்றும் ஸ்ரீகிருஷ்ணர், அர்ஜூனனுக்கு விளக்கிக் கூறினார். துர்தேவதைகள் எனக் கூறப்படுவற்றிலும் கூட தெய்வீகம் இருக்கிறது என்றும் ஒருவர் தன்னுள் உள்ள தீய குணங்களை விட்டு விட்டால், துர்தேவதைகள் எந்தத் தீங்கையும் செய்யாது என்பதை பகவான் ஸ்ரீகிருஷ்ணர் எடுத்துக் காட்டினார்.
ஒருவரது கோபமே, ஒரு பேயைப் போன்ற உருவத்தை ஏற்கிறது. நீங்கள் ப்ரேமையை வளர்த்துக் கொண்டு விட்டால், பின்னர், நீங்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொன்றும் ப்ரேமையின் ரூபத்தைக் கொண்டதாகவே இருக்கும்