azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 26 Nov 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 26 Nov 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

Sankalpas or Inner Resolutions tend to be attracted towards one another, when they flow in the same direction or are related to similar desires. Cranes fly together as flock; they do not mix with crows. Crows form their own groups. Among beasts of the forest, bisons have herds of their own kind; they have no comradeship with elephants, which keep bisons away and mingle only with elephants. Deer too form groups by themselves. Similarly, a musician attracts musicians around him. Teachers seek teachers for company. Decisions which mind makes, either to commit or omit, are amazing, for, the Cosmos and all its contents can be described as their consequence. The mind decides on the fact or facet of the objective world which it has to notice. The Sankalpa bears fruit and the fruit conforms to the seed from which it springs. It has to reveal its impact, sooner or later. So, man has to avoid evil sankalpas and cultivate good ones! - Divine Discourse, Jul 10, 1986
TEST ALL YOUR ACTIONS, WORDS, THOUGHTS ON THIS TOUCHSTONE:
“WILL THIS BE APPROVED BY GOD? WILL THIS REBOUND TO HIS RENOWN?- BABA
அவை ஒரே திசையில் செல்லும் போதோ அல்லது ஒரே விதமான ஆசைகளுக்குச் சம்பந்தப்பட்டதாக இருந்தாலோ, ஸங்கல்பங்கள் அல்லது உள்ளார்ந்த தீர்மானங்கள், ஒன்றுக்கு ஒன்று ஈர்க்கப்படுகின்றன. கொக்குகள் ஒரே கூட்டமாகவே பறக்கின்றன; அவை காகங்களோடு சேருவதில்லை. காகங்கள் அவைகளுக்கே சொந்தமான ஒரு கூட்டத்தை அமைக்கின்றன.காட்டு விலங்களுக்கு இடையில் காட்டெருமைகளுக்கு ,அவைகளின் சொந்த மந்தைகள் உண்டு; யானைகளுடன், அவற்றிற்கு எந்த நட்பும் இருப்பதில்லை. காட்டெருமைகளை விரட்டி, யானைகளுடன் மட்டுமே யானைகள் பழகுகின்றன. மான்களும் கூட அவர்களுக்குள்ளேயே கூட்டங்களை அமைக்கின்றன. இதே போல், ஒரு இசைக்கலைஞர் அவரைச் சுற்றி, இசைக்கலைஞர்களை ஈர்க்கிறார். ஆசிரியர்கள், பிற ஆசிரியர்களின் நட்பு வட்டத்தையே நாடுகிறார்கள். ஒன்றைச் செய்வது அல்லது தவிர்ப்பது என மனம் எடுக்கும் தீர்மானங்கள் வியக்கத்தக்கவை; ஏனெனில் இந்த பிரபஞ்சமும், அதன் அனைத்து பொருட்களும் கூட இவற்றின் விளைவுகளே எனலாம். மனம், பொருட்களாலான உலகில் தான் கவனிப்பவை பற்றிய உண்மை அல்லது அம்சத்தின் மீது முடிவு எடுக்கிறது. ஸங்கல்பம் பலனை அளிக்கிறது; அந்தப் பலன், அது துளிர்த்து எழுந்த விதையைப் பொறுத்தே இருக்கிறது. அது, தனது தாக்கத்தை இன்றோ அல்லது நாளையோ வெளிப்படுத்தியே ஆக வேண்டும். எனவே, மனிதன், தீய ஸங்கல்பங்களைத் தவிர்த்து, நல்லவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும் !
உங்களது அனைத்து செயல்கள், சொற்கள் மற்றும் சிந்தனைகளை, ‘’இது இறைவனால் ஏற்றுக் கொள்ளத்தக்கதா? இது அவனது கீர்த்திக்கு உகந்ததா?’’ என்ற உரைகல்லில் சோதித்துப் பாருங்கள். - பாபா