azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 17 Nov 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 17 Nov 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

Yours is a splendid chance to become guides of mankind. You, who belong to the Sathya Sai Society, have this responsibility in an even greater measure, since you must lead model lives of sincere striving. Having taken the Name, you are bound to act according to My command and shed the light of devotion on all who come near you. No attempt need be made to run away from the duties of one’s station and status. Remember, those duties have to be done as worship, as offerings of one’s intelligence and skill, qualities, and thoughts and feelings at the Feet of the Lord in a spirit of thankfulness for the chance given, without a trace of egoism or a sense of attachment to the fruits of the actions. The root of all trouble is the uncontrolled and ill-directed mind. Obligatory actions have to be carried out, wherever you are, with care and sincerity. They award the needed discrimination and non-attachment. - Divine Discourse, Apr 23, 1961.
DOING ONE’S DUTY WELL IS THE HIGHEST SPIRITUAL ENDEAVOUR. - BABA
மனித குலத்திற்கே வழிகாட்டிகளாக ஆவதற்கான அருமையான வாய்ப்பு உங்களுடையது. நேர்மையான முயற்சியுடனான உதாரண வாழ்க்கையை நீங்கள் வாழ வேண்டி இருப்பதால், ஸ்ரீ சத்ய சாய் நிறுவனத்தைச் சார்ந்த உங்களுக்கு இந்தப் பொறுப்பு இன்னும் கூட அதிக அளவில் இருக்கிறது . என்னுடைய திரு நாமத்தை ஏற்றுக் கொண்டு விட்டதால், என்னுடைய ஆணைக்கு ஏற்ப நீங்கள் நடந்து, உங்கள் அருகில் வரும் அனைவர் மீதும் பக்தியின் ஒளியைப் பாய்ச்ச வேண்டும்.ஒருவரது பதவி மற்றும் நிலைக்கான பொறுப்புக்களிலிருந்து தப்பி ஓடுவதற்கான எந்த முயற்சியும் செய்யத் தேவையில்லை. ஒருவரது புத்தி மற்றும் திறன்கள், குணங்கள், சிந்தனைகள் மற்றும் உணர்வுகளை, அளித்த வாய்ப்பிற்கான நன்றி உணர்வுடனும், அகந்தை அல்லது செயல்களின் பலன்களின் மீதான பற்றுதலின் எந்த ஒரு சுவடும் இன்றியும், அந்தக் கடமைகளை ஒரு ஆராதனையாக, இறைவனின் கமல பாதங்களில் அர்ப்பணிப்புகளாகச் செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கட்டுக்கடங்காத மற்றும் தீய வழிகளில் செல்லும் மனமே அனைத்து துன்பங்களின் ஆணி வேராகும். நீங்கள் எங்கிருந்தாலும், கவனமாகவும் நேர்மையுடனும் கடமைப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தேவையான பகுத்தறிவையும், பற்றின்மையையும் அவை பரிசாக அளித்து விடும்.
ஒருவரது கடமையை, நன்றாக ஆற்றுவதே
மிக உயர்ந்த ஆன்மிக சாதனையாகும் - பாபா