azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 15 Nov 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 15 Nov 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

Do not be carried away by worldly pleasures. Take the sacred path and sanctify your time by chanting the divine name. There is no need to allocate a specific time or place for namasmarana. You can do it wherever you are and whatever you are doing. One needs to pay tax for water and electricity but there is no tax for namasmarana. Nobody can stop you from doing it. It’s very simple, yet most effective. But people don't realise the value of namasmarana as it is so easy to practise. They think that God can be attained only through severe austerities. This is a misconception. Without troubling yourself or causing trouble to others, you can chant the divine name. Cultivate love for God. That is true devotion. Develop sacred love. Do not criticise or ridicule anybody. Give happiness to all by sharing your love with them. This is true spiritual practice. Follow this simple path, experience bliss and sanctify your lives! (Divine Discourse, Feb 24, 2002.)
TO GAIN LIBERATION, TO WIN RAMA’S GRACE, IT IS NOT ENOUGH TO REPEAT HIS NAME;
YOU MUST PRACTICE THE RAMA PRINCIPLE. - BABA
உலக இன்பங்களால் மயங்கி விடாதீர்கள். புனிதமான பாதையை எடுத்துக் கொண்டு, உங்களது காலத்தை இறை நாமஸ்மரணையால் புனிதமாக்குங்கள். இறை நாமஸ்மரணைக்கு என்று ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் எங்கு இருந்தாலும், என்ன பணி ஆற்றிக் கொண்டு இருந்தாலும், நீங்கள் அதைச் செய்ய முடியும். ஒருவர் தண்ணீர் மற்றும் மின்சாரத்திற்கு வரி கட்ட வேண்டும்,ஆனால் இறை நாமஸ்மரணைக்கு எந்த வரியும் இல்லை. நீங்கள் அதைச் செய்வதை எவரும் நிறுத்த முடியாது.அது மிகவும் எளிமையானது, ஆனால் மிகுந்த பயனளிக்க வல்லது. அதைக் கடைப்பிடிப்பது சுலபம் என்பதால், மனிதர்கள் இறைநாமஸ்மரணையின் மதிப்பை உணருவதில்லை. இறைவனை கடுமையான விரதங்களின் மூலமாக மட்டும் தான் அடைய முடியும் என்று நினைக்கிறார்கள். இது ஒரு தவறான கருத்தாகும். உங்களைத் தொந்தரவு படுத்திக் கொள்ளாமலும், பிறரைத் தொந்தரவு செய்யாமலும், நீங்கள் இறைநாமஸ்மரணை செய்யலாம். இறைவன் பால் ப்ரேமையை வளர்த்துக் கொள்ளுங்கள். அதுவே உண்மையான பக்தியாகும். புனிதமான ப்ரேமையை அபிவிருத்தி செய்து கொள்ளுங்கள். எவரையும் விமரிசிக்கவோ அல்லது அவமானப்படுத்தவோ செய்யாதீர்கள். உங்களது ப்ரேமையை அவர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம், அனைவருக்கும் மகிழ்ச்சி அளியுங்கள். அதுவே உண்மையான ஆன்மிக சாதனையாகும். இந்த எளிய பாதையைப் பின்பற்றி,ஆனந்தத்தை அனுபவித்து, உங்களது வாழ்க்கையை புனிதமாக்கிக் கொள்ளுங்கள்.
ஆத்ம சாக்ஷாத்காரம் அடைவதற்கும் ஸ்ரீராமரின் அருளைப் பெறுவதற்கும், அவரது திருநாமத்தை ஜபித்தால் மட்டும் போதாது ; ஸ்ரீராம தத்துவத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் - பாபா