azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 13 Nov 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 13 Nov 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

We should examine the reason why the formless Lord takes the form of a human being and comes into the midst of humans. It is so that He may mix with the human beings and set up examples and ideals for them, and to convey to them all aspects which they should learn. Many people ask very innocently and ignorantly why an Avatar, who possesses all powers, should subject Oneself to all troubles; and why should the Avatar tolerate hunger and suffering all around. An Avatar who has all the powers should be able to remove all such suffering in one moment. If there is any meaning in such a question, why should an Avatar come in human form at all? The Avatar can remain as a formless Divinity and do all these things from that position itself. In time, and under certain conditions and environment, whatever has to be done must be done and such acts, at a human level, have to be performed. (Summer Roses On Blue Mountains, 1976, Ch 6.)
HAPPINESS AND SORROW COEXIST. YOU CANNOT ATTAIN
HAPPINESS WITHOUT UNDERGOING DIFFICULTIES. - BABA
அரூபமான இறைவன், ஒரு மனித ரூபத்தை ஏற்று, மனிதர்களுக்கு இடையே ஏன் வருகிறான் என்பதை நாம் ஆராய வேண்டும். அவன் மனிதர்களுடன் கலந்து பழகி, அவர்களுக்கான உதாரணங்கள் மற்றும் இலட்சியங்கள் நிலை நாட்டி, அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய அனைத்து அம்சங்களையும் அவர்களுக்குத் தெரிவிப்பதற்காகவே அவ்வாறு செய்கிறான். அனைத்து சக்திகளையும் படைத்த அவதாரம் தன்னையே ஏன் அனைத்து கஷ்டங்களிலும் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவதாரம் ஏன் எங்கு பார்த்தாலும் இருக்கும் பசி மற்றும் துன்பங்களை சகித்துக் கொள்ள வேண்டும் என்று பல மனிதர்கள் அப்பாவித்தனமாகவும், அறியாமையாலும் கேட்கிறார்கள். அனைத்து சக்திகளையும் படைத்த அவதாரம் ஒரு நொடியில் இப்படிப் பட்ட அனைத்து துன்பங்களையும் நீக்கி விட முடியும். இப்படிப் பட்ட கேள்வியில் ஒரு அர்த்தம் இருக்கும் என்றால், அவதாரம் ஏன் மனித ரூபத்தில் வர வேண்டும்? அவதாரம் ஒரு அரூப தெய்வீக நிலையில் இருந்து கொண்டு, இவை அனைத்தையும், அந்த நிலையிலிருந்தே செய்து விட முடியுமே. ஒரு கால கட்டத்தில், சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்கள் மற்றும் சூழ்நிலையில் எது செய்யப் பட வேண்டுமோ அது செய்யப்பட்டே ஆக வேண்டும்; இப்படிப் பட்ட செயல்கள், ஒரு மனித நிலையிலேயே ஆற்றப்பட வேண்டும்.
இன்பமும், துன்பமும் இணைந்தே இருக்கின்றன.துன்பங்களை அனுபவிக்காமல், நீங்கள் இன்பத்தைப் பெற முடியாது- பாபா