azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 09 Nov 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 09 Nov 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

Constant recollection of the glory and majesty of God, who is the Indweller, through the instrumentality of the Name, helps to purify the heart. That is the B12 vitamin that promotes spiritual health. There is no need for any other tablet. Life is a pilgrimage where one drags the feet along the rough and thorny road. With the Name of God on the lips, one will have no thirst; with the Form of God in the heart, one will feel no exhaustion. The company of the holy will inspire one to travel in hope and faith. The assurance that God is within all, that He is ever near, will lend strength to the limbs and courage to the eye. Remember that with every step, you are nearing God; and God too takes ten steps towards you. There is no stopping place in this pilgrimage; it is one continuous journey, through day and night, through valley and desert, through tears and smiles, through death and birth, and through tomb and womb. (Divine Discourse, Mar 05, 1968)
THE BEST SPIRITUAL DISCIPLINE IS TO STRENGTHEN YOUR INWARD VISION. - BABA
உள்ளுறைபவனாகிய இறைவனின் மகத்துவம் மற்றும் கம்பீரத்தை, அவனது திருநாமம் எனும் கருவியின் மூலம் இடையறாது நினைவு கூறுவது இதயத்தைத் தூய்மைப் படுத்த உதவுகிறது. ஆன்மிக ஆரோக்யத்தை ஊக்குவிக்கும் B12 வைட்டமின் இதுவே. வேறு எந்த மாத்திரையும் அவசியமில்லை. வாழ்க்கை என்பது, கரடுமுரடான மற்றும் முட்கள் நிறைந்த ஒரு பாதையில் ஒருவர் தட்டுத் தடுமாறிச் செல்லும் ஒரு தீர்த்த யாத்திரையாகும். இறைவனது திருநாமத்தை உதடுகளில் கொண்டிருக்கும் போது ஒருவருக்கு தாகம் இருக்காது; இறைவனது திவ்ய ரூபத்தை இதயத்தில் கொண்டிருக்கும் போது ஒருவர் களைப்பையே உணர மாட்டார். புனிதமானவர்களின் நட்பு வட்டம் ஒருவருக்கு நம்பிக்கை மற்றும் விசுவாசத்துடன் பயணிக்க உத்வேகம் அளிக்கும். இறைவன் அனைத்தினுள்ளும் இருக்கிறான், அவன் எப்போதும் அருகில் இருக்கிறான் என்ற உத்திரவாதம் அவயவங்களுக்கு வலிமையையும், கண்ணுக்கு தைரியத்தையும் அளிக்கும். ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் நீங்கள் இறைவனை நெருங்கிக் கொண்டு இருக்கிறீர்கள்; இறைவனும் கூட உங்களை நோக்கி பத்து அடிகள் எடுத்து வைக்கிறான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த தீர்த்த யாத்திரையில் தங்கும் இடம் என்று எதுவும் இல்லை; பகல் மற்றும் இரவு, பள்ளத்தாக்கு மற்றும் பாலைவனம்,கண்ணீர்கள் மற்றும் களிப்புகள், இறப்பு மற்றும் பிறப்பு மேலும் கல்லறை மற்றும் கருவறை ஆகியவற்றின் மூலம் செல்லும் இடையறாது தொடரும் ஒரு பயணமாகும் இது.
தலைசிறந்த ஆன்மீக சாதனை உங்களது
அக திருஷ்ட்டியை வலுப்படுத்துவதே - பாபா