azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 05 Nov 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 05 Nov 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

People's minds are too full of the world; the stomach is demanding too much of their time and energy. Their desires and wants are multiplying too fast for their capacity to satisfy them, their dreams are far too real for them; they lead one into false victories and absurd adventures. Engrossed in the analysis of the material world, people have lost all sense of spirit, sweetness and sublimity; under this new dispensation, truth has become just a word in the dictionary. Compassion is reduced to a meaningless travesty. Humility, patience, reverence - these are as invalid as a flameless lamp in the far distance. The only hold that one has in this dreadful darkness is the name of God. That is the raft which will take one across this stormy sea, darkened by hate and fear, and churned by anxiety and terror! (Divine Discourse, Feb 26, 1968)
DEDICATE YOUR HEART TO GOD; GOD WILL BE ONE WITH YOU, THE HEART OF YOUR HEART. - BABA
மக்களது மனங்கள், முழுமையாக உலகத்தைப் பற்றியதாகவே உள்ளன;வயிறு, அவர்களது நேரம் மற்றும் சக்தியை அதிகம் கோருகிறது. அவர்களது விருப்பங்களும், ஆசைகளும், அவர்களால் திருப்திப் படுத்த முடியாத அளவிற்கு அதிகமான வேகத்தில் பெருகிக் கொண்டே போகின்றன; அவர்களது கனவுகள், அவர்களைப் பொறுத்த வரை மிகவும் உண்மையானதாகத் தோன்றுகின்றன; அவைகள், ஒருவரை தவறான வெற்றிகள் மற்றும் அபத்தமான சாகசங்களுக்கு இட்டுச் செல்கின்றன. பொருட்களாலான இந்த உலகின் ஆய்வில் மூழ்கி விட்ட மக்கள், பகுத்தறிவு, இனிமை மற்றும் விழுமியத்தின் அனைத்து உணர்வுகளையும் இழந்து விட்டார்கள்; இந்தப் புதிய ஆளுமையின் கீழ், சத்யம் என்பது அகராதியில் உள்ள வெறும் ஒரு வார்த்தையாக மட்டுமே ஆகி விட்டது. பரிவு என்பது ஒரு அர்த்தமற்ற பரிகாசத்தின் நிலைக்குத் தாழ்த்தப் பட்டு விட்டது. பணிவு,பொறுமை,பயபக்தி- இவை அனைத்தும் வெகு தொலைவில் உள்ள ஒரு எரியாத விளக்கு போல செல்லாதவையாக ஆகி விட்டன. இந்த பயங்கரமான இருண்ட சூழ்நிலையில் ஒருவருக்கு இருக்கும் ஒரே பிடிப்பு இறைவன் மட்டுமே. த்வேஷம் மற்றும் பயத்தால் இருட்டாக்கப்பட்டும், கலக்கம் மற்றும் பயங்கரவாதத்தால் கடையப்படும் இருக்கும், இந்த அலை பாயும் கடலைக் கடந்து ஒருவரை எடுத்துச் செல்லக் கூடிய தோணி அதுவே.
உங்கள் இதயத்தை இறைவனுக்கு அர்ப்பணித்து விடுங்கள்; உங்கள் இதயத்தின் இதயமாகிய இறைவன் உங்களுடன் ஒன்றாக இருப்பான்- பாபா