azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 04 Nov 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 04 Nov 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

The bee hovers around the lotus, sits upon it, and drinks the nectar; while drinking sweet intoxicating honey, it is silent, steadfast, concentrated, and forgetful of all else. Man too becomes like that when he is in the presence of God. The hum of the bee ceases and is silent when drinking of the nectar begins. Man too, sings, extols, argues, asserts, only until he discovers the rasa (sweet essence). That rasa is prema-rasa (sweet essence of love). Where there is love, there can be no fear, no anxiety, no doubt, and no ashanti (absence of peace). When you are afflicted with ashanti you can be sure that your love is restricted, your love has some ego mixed in it. The senses are one's deadly foes; for they drag your attention away from the source of joy inside you, to objects outside you. When you are convinced that they are at the bottom of this conspiracy to mislead you, you will certainly stop catering to them. (Divine Discourse, Feb 26, 1968)
THE EXPERIENCER OF THE PREMA (LOVE) IS THE INNER ‘I’, WHICH IS THE REFLECTION OF THE REAL I, THE ATMA (SOUL). WHEN SENSES ARE OUT OF ACTION, THAT ‘I’ WILL SHINE IN ITS FULL GLORY. - BABA
தேனீ, தாமரையைச் சுற்றி வந்து, பின் அதில் அமர்ந்து,அதன் தேனைக் குடிக்கிறது. மயக்கமூட்டும் தேனைப் பருகும் போது, அது மௌனமாகவும், மன உறுதியுடனும், மனக்குவிப்புடனும், மற்ற அனைத்தையும் மறந்த நிலையிலும் இருக்கிறது. இறைவனது சன்னிதானத்தில் இருக்கும் போது, மனிதனும் கூட இவ்வாறே ஆகி விடுகிறான். தேனைக் குடிப்பது தொடங்கியவுடன், தேனீயின் ரீங்காரம் நின்று, அது அமைதியாகி விடுகிறது. தெய்வீக ரசத்தின் இனிமையைக் கண்டு கொள்ளும் வரையில் மட்டுமே, மனிதனும் கூட, பாடுகிறான், புகழ்கிறான், வாதம் செய்கிறான், தனது கருத்தை வலியுறுத்துகிறான். அந்த ரசமே ப்ரேம ரசமாகும். ப்ரேமை இருக்கும் இடத்தில், அச்சமோ, கவலையோ, சந்தேகமோ அசாந்தியோ இருக்க முடியாது. நீங்கள் அசாந்தியால் பீடிக்கப் பட்டிருக்கும் போது, உங்களது ப்ரேமை சுயநலத்தால் களங்கப் பட்டும், உங்களது ப்ரேமையில் சிறிதளவு அஹங்காரம் கலந்தும் இருக்கிறது என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம். புலன்களே ஒருவரது கொடிய விரோதிகள் ஆவார்கள்; ஏனெனில் அவைகளே உங்களது கவனத்தை, உங்களது உள்ளார்ந்த ஆனந்த ஊற்றிலிருந்து இழுத்து அதை உங்களுக்கு வெளியே உள்ள பொருட்களின் மீது செலுத்துகின்றன. உங்களைத் திசை திருப்பும் சதிக்குப் பின்னால் அவைகளே இருக்கின்றன என்பதை நீங்கள் உறுதியாக நம்பும்போது, அவைகளுக்குத் தீனி போடுவதை நீங்கள் கண்டிப்பாக நிறுத்தி விடுவீர்கள்.
தெய்வீக ப்ரேமையை அனுபவிப்பது உள்ளார்ந்த ‘’ நான்’’ ஆகும்; இது உண்மையான ‘’ நான்’’ ஆன ஆத்மாவின் ப்ரதிபலிப்பே. புலன்கள் செயலிழந்து விட்டால், பின்னர், ‘’ நான்’’ என்பது அதன் முழு மகிமையுடன் ஒளி விட்டுப் பிரகாசிக்கும் -பாபா