azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 30 Oct 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 30 Oct 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

It is most essential you understand that everything happens as per His will. Whatever happens is for your own good. With such firm conviction, you should accept pleasure and pain, good and bad with equanimity. It may be difficult for you to bear misfortunes. You should pray to God to grant you the necessary strength to bear them. Difficulties are like passing clouds. They will certainly give way to happiness. Man always strives for happiness. How can one attain it? True happiness lies in union with God. In fact, God is beyond happiness and sorrow. Whatever you may do, He says, “Tathastu” (So shall it be). He showers His blessings on you saying, “Let it be for your own good”. You will be free from sorrow once you understand the Bhagavad-tatva (nature of Divinity). If you are undergoing difficulties, do not get disheartened. Have faith that God is making you go through the ordeal for your own good. (Divine Discourse, Feb 26, 2006)
HAPPINESS AND SORROW COEXIST. YOU CANNOT ATTAIN HAPPINESS
WITHOUT UNDERGOING DIFFICULTIES. - BABA
ஒவ்வொன்றும் இறைவனது சித்தத்தின் படியே நடக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும். எது நடந்தாலும், அது உங்களது நலனுக்காகவே. இப்படிப் பட்ட உறுதியான நம்பிக்கையுடன், நீங்கள் சுகம் மற்றும் துக்கம், நல்லவை மற்றும் கெட்டவை ஆகியவற்றை சமச்சீரான மனப்பாங்குடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். துரதிர்ஷ்டங்களைத் தாங்குவது உங்களுக்கு கடினமாக இருக்கலாம். அவற்றைத் தாங்கிக் கொள்வதற்கான சக்தியை அளிக்க வேண்டும் என நீங்கள் இறைவனைப் பிரார்த்திக்க வேண்டும். கஷ்டங்கள், கலையும் மேகங்கள் போன்றவை. அவை கண்டிப்பாக சந்தோஷமாக மாறி விடும். மனிதன் எப்போதும் சந்தோஷத்திற்காகப் பாடுபடுகிறான். ஒருவர் அதை எவ்வாறு அடைவது? உண்மையான இன்பம் இறைவனுடன் இணைவதில் தான் இருக்கிறது. உண்மையில் இறைவன் இன்பம் மற்றும் துன்பத்திற்கு அப்பாற்பட்டவன். நீங்கள் எதைச் செய்தாலும், அவன் ‘’ததாஸ்து’’ (அப்படியே ஆகட்டும்) என்று சொல்கிறான். ‘’அது உங்களது நலனுக்காக இருக்கட்டும்‘’ எனக் கூறி உங்கள் மீது தனது ஆசிகளைப் பொழிகிறான். பகவத் தத்வாவைப் (தெய்வீகத்தின் தன்மை) புரிந்து கொண்டு விட்டால், நீங்கள் துக்கத்திலிருந்து விடுபட்டு விடுவீர்கள். நீங்கள் கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டு இருந்தால் மனம் தளராதீர்கள். உங்களது சொந்த நலனுக்காகவே, இறைவன் உங்களைச் சோதனையில் ஆழ்த்துகிறார் என நம்புங்கள்.
இன்பமும், துன்பமும் இணைந்தே இருக்கின்றன.துன்பங்களை அனுபவிக்காமல், நீங்கள் இன்பத்தைப் பெற முடியாது- பாபா