azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 29 Oct 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 29 Oct 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

Human life is highly sacred and mysterious. Only God can unravel its mystery. Visweswara (the Lord of the universe) permeates the entire universe. He transcends all descriptions. He is present in you in the form of atma. There is only one path for the realisation of atma. Give up the feeling of ‘mine’. You say ‘this is mine and that is mine’. Once you get rid of such worldly attachment, you will develop purity, steadiness and selflessness. You will be free from suffering, worries and anxiety. Ultimately, you will attain moksha (liberation). Having attained manavatwa (humanness), you should make efforts to rise to the level of Madhavatwa (Divinity). That is your goal. What is the use if you remain in manavatwa forever? You should develop sanmati (pure mind) to rise to the level of the Divine. Unity confers purity which will in turn lead to Divinity. Hence, all of you must stand united. You belong to the human race. You belong to one family. (Divine Discourse, Feb 26, 2006)
CONDUCT YOURSELF LIKE BROTHERS AND SISTERS IN THE SOCIETY. ABSENCE OF SUCH A SPIRIT OF UNITY WILL DIMINISH PURITY AND TAKE YOU AWAY FROM DIVINITY! - BABA
மனித வாழ்க்கை மிகவும் புனிதமானதும் , மர்மமானதும் ஆகும். இறைவன் மட்டுமே அதன் மர்மத்தை விடுவிக்க முடியும். விஸ்வேஸ்வரா (பிரபஞ்சத்தின் இறைவன்), ப்ரபஞ்சமனைத்திலும் ஊடுருவி நிற்கிறான். அவன், அனைத்து விளக்கங்களுக்கும் அப்பாற்பட்டவன். அவன் உங்களுள் ஆத்மாவின் ரூபத்தில் இருக்கிறான். ஆத்மாவை உணருவதற்கு ஒரே ஒரு பாதை தான் இருக்கிறது. ‘’எனது’’ என்ற உணர்வை விட்டு விடுங்கள். நீங்கள், ‘’இது என்னுடையது, அது என்னுடையது ‘’ என்கிறீர்கள். ஒரு முறை இப்படிப் பட்ட உலகியலான பற்றினை நீங்கள் விட்டு விட்டால், பரிசுத்தம், நிலைகுலையாமை மற்றும் தன்னலமின்மை ஆகியவற்றை நீங்கள் அபிவிருத்தி செய்து கொள்வீர்கள். நீங்கள் துன்பம், கவலைகள் மற்றும் கலக்கங்கள் இன்றி இருப்பீர்கள். இறுதியாக, நீங்கள் மோக்ஷத்தை அடைவீர்கள். மானவத்துவத்தை (மனிதத்தன்மை) அடைந்து விட்ட பிறகு, நீங்கள் மாதவத்துவத்தின் (இறைத்தன்மை) நிலைக்கு உயர முயற்சிகள் செய்ய வேண்டும். இதுவே உங்களது குறிக்கோள். மானவத்துவத்திலேயே நீங்கள் இருந்து கொண்டு இருப்பதால் என்ன பயன்? நீங்கள் தெய்வீக நிலைக்கு உயர ஸன்மதியை (பரிசுத்தமான மனதை) வளர்த்துக் கொள்ள வேண்டும். பரிசுத்தம் உங்களுக்கு ஒற்றுமையை அளித்து, அது உங்களை தெய்வீகத்திற்கு இட்டுச் செல்லும். எனவே, நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நீங்கள் மனித குலத்தைச் சேர்ந்தவர்கள். நீங்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
சமுதாயத்தில் சகோதர, சகோதரிகளைப் போல உங்களை நடத்திக் கொள்ளுங்கள். இப்படிப் பட்ட ஒருமை உணர்வு இல்லாமை, பரிசுத்தத்தைக் குறைத்து, உங்களை தெய்வீகத்திலிருந்துப் பிரித்து இழுத்துச் சென்று விடும்- பாபா