azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 21 Oct 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 21 Oct 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

The Navaratri festival is observed by contemplating on God for ten days and cleansing one's self of all impurities, to experience the Divinity within. The penultimate day of the festival is dedicated to what is termed as Ayuda Puja (worship of weapons). The weapons to be worshipped are the divine powers within. When the Divine is worshipped in this way, one is bound to progress spiritually. On the contrary, the usual practice now is to treat the Divine and the devotee as separate from each other. This is wrong. The Divine is omnipresent and is in everyone and in every object. Realising this oneness, all actions should be done as an act of dedication to the Divine. Imagine the bliss that can be experienced in such a state of mind! It is essential to celebrate the festival in this sacred spirit. It is not enough to do this for only ten days during the Navaratri festival. It should become the rule all through one's life, till the time one draws one's life-breath. (Divine Discourse, Oct 14, 1994)
THE BODY DERIVES ITS VALUE FROM THE SPIRIT WITHIN.
HENCE IT SHOULD BE REGARDED AS A SACRED TEMPLE. - BABA
பத்து நாட்கள் இறைவனைத் தியானித்து, ஒருவரது அனைத்து அசுத்தங்களையும் களைவதன் மூலம், உள்ளுறையும் தெய்வீகத்தை அனுபவிப்பதற்காகவே, நவராத்ரி பண்டிகை அனுசரிக்கப் படுகிறது. பண்டிகையின் இறுதி நாளுக்கு முந்தைய நாள், ஆயுத பூஜைக்கு ( ஆயுதங்களின் ஆராதனை) அர்ப்பணிக்கப் படுகிறது. உள்ளுறையும் தெய்வீக சக்திகளே ஆராதிக்கப்பட வேண்டிய ஆயுதங்கள்.தெய்வத்தை இவ்வாறு வழிபடும்போது, ஒருவர் கண்டிப்பாக ஆன்மிகத்தில் முன்னேறுவார். மாறாக, இறைவனையும் பக்தரையும் ஒருவருக்கொருவர் தனித்தனியாகக் கருதுவதே இப்போது வழக்கமான நடைமுறையாக உள்ளது. இது தவறானது. இறைவன் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்தவனும், ஒவ்வொருவருள்ளும் மற்றும் ஒவ்வொன்றிலும் உறைபவனும் ஆவான். இந்த ஒருமையினை உணர்ந்து, அனைத்து செயல்களையும், இறைவனுக்கு அர்ப்பணிப்பாக ஆற்ற வேண்டும். இப்படிப் பட்ட ஒரு மனப்பாங்கின் நிலையில் அனுபவிக்க முடிகின்ற ஆனந்தத்தைக் கற்பனை செய்து பாருங்கள்! இந்தப் புனித உணர்வோடு, இந்தப் பண்டிகையைக் கொண்டாடுவது அத்தியாவசியமாகும். நவராத்ரி பண்டிகையின் பத்து நாட்களில் மட்டும் இதைச் செய்வது போதுமானதல்ல. ஒருவரது வாழ்நாள் முழுவதும், இறுதி மூச்சு இருக்கும் வரை, இது ஒரு விதிமுறையாக ஆக வேண்டும்.
உடல் அதன் மதிப்பை உள்ளுறையும் ஆத்மாவிலிருந்து தான் பெறுகிறது. எனவே, அதை ஒரு புனிதக் கோவிலாகத் தான் கருத வேண்டும்- பாபா