azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 07 Oct 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 07 Oct 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

It is a hard job to know about your own Self. Take the case of the food that you eat with your own mouth. You feel it in your stomach but after that you do not experience what happens to it at each stage. How then can you know, without acquiring the special means for it, the Truth that lies behind the sheaths that encase and enclose you - the Annamaya, Pranamaya, Manomaya, Vijnanamaya and Aanandhamaya (sheaths of material, vital energy, mind, intelligence and bliss)? Clear your intellect or intellectual power (dhee shakti) of the cobwebs of the ego, the dust of desire, the soot of greed and envy, and it becomes a fit instrument for revealing the Swarupa - the Inner Truth. "Know yourself, know the Inner Motivator, the Antaryamin” - that is the exhortation of the scriptures of all faiths. For, unless you are armed with that knowledge, you are like a ship without a compass, sailing on a stormy sea. (Divine Discourse, Apr 16, 1964)
DO NOT GO ON ADDING TO THE THINGS WHICH BIND YOU TO THEM.
BIND YOURSELF TO THE GREAT LIBERATOR, GOD. - BABA
உங்களது சொந்த ஆத்மாவைப் பற்றித் தெரிந்து கொள்வது என்பது கடினமான காரியமே. உங்களது சொந்த வாயால் நீங்கள் உண்ணும் உணவையே எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அதை உங்கள் வயிற்றிற்குள் உணருகிறீர்கள், ஆனால் அதன் பிறகு ஒவ்வொரு நிலையிலும் அதற்கு என்ன ஆகிறது என்பதை நீங்கள் அனுபவிப்பதில்லை. அப்படி இருக்கும் போது, அதை உணருவதற்குத் தேவையான தனிப்பட்ட முறைகளைப் பெறாமல், உங்களை மூடிக் கொண்டு இருக்கும், அன்னமய, ப்ராணமய, மனோமய, விஞ்ஞானமய மற்றும் ஆனந்த மய என்ற கோசங்களுக்கு பின்னால் இருக்கும் சத்தியத்தை, உங்களால் எப்படித் தெரிந்து கொள்ள முடியும்? உங்களுடைய புத்தி அல்லது புத்திகூர்மையிலிருந்து (தீ சக்தி), அகந்தையின் ஒட்டைகளையும்,ஆசையின் தூசுகளையும்,பேராசை மற்றும் பொறாமையின் புகைக்கரியையும் நீக்கி விடுங்கள்; ஸ்வரூபா எனப்படும் அக சத்தியத்தை எடுத்துக் காட்டுவதற்கு ஏற்ற ஒரு கருவியாக அது ஆகி விடும். ‘’ உங்களை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்; உங்கள் அக உந்துபவரான அந்தர்யாமியைத் தெரிந்து கொள்ளுங்கள் ‘’ அதுவே அனைத்து மத நூல்களின போதனையாகும். ஏனெனில், அந்த அறிவு எனும் ஆயுதமின்றி, நீங்கள், ஒரு திசைகாட்டி இல்லாமல், ஒரு புயல் காற்றில் கடலில் சிக்கித் தவிக்கும் கப்பல் போன்றவரே.
உங்களை அவற்றுடன் பிணைக்கும் பொருட்களைச் சேர்த்துக் கொண்டே போகாதீர்கள். தலை சிறந்த விடுதலை அளிப்பவரான இறைவனுடன் உங்களை நீங்களே பிணைத்துக் கொள்ளுங்கள்- பாபா