azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 30 Sep 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 30 Sep 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

To be happy, one of two things must happen: All your desires must be fulfilled or you should not have any desire. Of these, the reduction of desire is the easier path. Take the troubles that come to you as tests and opportunities to learn non-attachment. The hot summer sends you to air-conditioning. Grief sends you to God. When a child dies, ask yourself the question, “Is it for my sake that the child was born?” The child had their own destiny to fulfil, their own history to work out. Gauthama Buddha’s father was so overcome with grief when he saw his son with a begging bowl in the street that he told him thus: “Every one of my ancestors was a king: what misfortune is this that a beggar was born in this line?” Buddha replied, “Every one of my ancestors had a beggar’s bowl; I know of no king in my line.” The father and the son walked different paths, traveled along divergent routes. (Divine Discourse, Nov 26, 1962)
DESIRE CEASES, WHEN GOD SEIZES THE MIND. - BABA
மகிழ்ச்சியாக இருப்பதற்கு இரண்டு விஷயங்களில் ஒன்று நடக்க வேண்டும்; உங்களது அனைத்து ஆசைகளும் பூர்த்தியாக வேண்டும் அல்லது உங்களுக்கு எந்த ஆசையும் இருக்கக் கூடாது.இவற்றில், ஆசையைக் குறைப்பதே எளிதான பாதையாகும். பற்றின்மையைக் கற்றுக் கொள்ள வைக்கும் சோதனைகள் மற்றும் வாய்ப்புக்களாக, உங்களுக்கு வரும் துன்பங்களைக் கருதுங்கள். சுட்டெரிக்கும் வெயில் உங்களை குளிரவைக்கும் சாதனத்திற்கு அனுப்புகிறது. துக்கம் உங்களை இறைவன் பால் அனுப்புகிறது. ஒரு குழந்தை இறந்து விட்டால், ‘’எனக்காகவா இந்தக் குழந்தை பிறந்தது?’’ என்ற கேள்வியை உங்களையே நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள்.அந்தக் குழந்தைக்கு, நிறைவேற வேண்டிய சொந்த விதியும், நடக்க வேண்டிய சொந்த வரலாறும் இருந்தது. கௌதம புத்தரின் தந்தை, தனது மகன் ஒரு பிக்ஷா பாத்திரத்தை ஏந்திக் கொண்டு தெருவில் சென்றதைக் கண்டபோது, துக்கம் தாங்க முடியாமல், ‘’ எனது ஒவ்வொரு முன்னோரும் அரசர்களாக இருந்தார்கள்; என்னுடைய வம்சத்தில் ஒரு பிச்சைக்காரன் வந்து பிறப்பது எப்படிப் பட்ட துர்பாக்கியம்?’’ என்று கூறினாராம். அதற்கு புத்தர், ‘’ எனது ஒவ்வொரு முன்னோருக்கும் ஒரு பிக்ஷா பாத்திரம் இருந்தது; என்னுடைய வம்சத்தில் எந்த அரசனையும் நான் அறியேன்‘’ என்று பதிலளித்தாராம். தந்தையும் மகனும் வெவ்வேறு பாதைகளில் நடந்து, மாறுபட்ட பாதைகளில் பயணித்தனர்.
இறைவன் மனதைக் கைப்பற்றும் போது, ஆசை கைவிட்டுப் போகும்- பாபா