azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 18 Sep 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 18 Sep 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

Arjuna was directed to engage in battle, win back his share of the Kingdom, ensure for the people righteous administration and atmosphere wherein they strive successfully to attain salvation. This he had to do in a spirit of dedication and surrender to the will of God, irrespective of his own likes and dislikes and the consequences that might flow from his unselfish activities. Gita advises that service to the society is the highest service, as well as the most beneficial sadhana (spiritual practice). You cannot run away from this obligation; you have to use the community wherein you are born for sublimating your egoism and saving yourself. When Dharmaraja performed the great Rajasuya sacrifice on the advice of the sage Narada to propitiate his deceased father, Lord Krishna attended the sacrifice and asked to be allotted some service; He preferred the service of removing the leaves on which food was served for the thousands who were fed every day! (Divine Discourse, Jan 11 1968)
SERVICE (SEVA) TAKEN UP AS A SPIRITUAL DISCIPLINE (SADHANA) TEACHES FORTITUDE (SAHANA). - BABA
அவரது நாட்டின் பங்கைத் திரும்பப் பெறுவதற்காகவும், மக்களுக்குத் தார்மீகமான நிர்வாகம் மற்றும் அவர்கள் மோக்ஷத்தைப் பெறுவதற்கு வெற்றிகரமாகப் பாடுபடுவதற்கான சூழ்நிலை ஆகியவற்றை உறுதி செய்வதற்காகவும், போரில் ஈடுபடுமாறு அர்ஜூனனக்குக் கட்டளை இடப் பட்டது. அவரது சொந்த விருப்பு, வெறுப்புக்கள் மற்றும் அவரது தன்னலமற்ற செயல்களிலிருந்து எழும் விளைவுகள் ஆகியவை எதுவாக இருந்தாலும், இறைவனது சங்கல்பத்திற்கு ஒரு அர்ப்பணிப்பு மற்றும் சரணாகதி உணர்வுடனும், இதை அவர் செய்ய வேண்டியதாக இருந்தது.ஸ்ரீமத் பகவத் கீதை, சமூக சேவையே மிக உயர்ந்த சேவை என்றும் மிகவும் பயனளிக்க வல்ல ஆன்மிக சாதனை என்றும் அறிவுறுத்துகிறது. இந்தப் பொறுப்பிலிருந்து நீங்கள் தப்பி ஓட முடியாது;உங்களது அஹங்காரத்தை புடமிட்டுச் சீர்படுத்துவதற்கும், உங்களையே காப்பாற்றிக் கொள்வதற்கும், நீங்கள் பிறந்த சமூகத்தை, நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தருமர், நாரத முனிவரின் ஆலோசனைப் படி, இறந்த தனது தந்தையின் ஆத்ம சாந்திக்காக ராஜசூய யாகம் செய்தபோது, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அதற்கு வந்திருந்து, தனக்கு ஏதாவது ஒரு சேவையை ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டார்.; ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக் காணவர்களுக்கு உணவு பறிமாறப்பட்ட எச்சில் இலைகளை எடுக்கும் சேவையை அவர் விரும்பி ஏற்றுக் கொண்டார் !
ஒரு ஆன்மிக சாதனையாக எடுத்துக் கொள்ளப் பட்ட சேவை,
சகிப்புத் தன்மையை போதிக்கிறது- பாபா