azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 13 Sep 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 13 Sep 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

Everything has energy latent in it — a piece of paper has it, a strip of cloth has it. When the latent energy is exhausted, death results; when energy fills, birth happens. Being-awareness-bliss (satchidananda) is energy. We (sat) are (chit) happy (ananda). Energy is all, and energy is derived from God. That is the very basis of all people. Now, we are building super-structures somewhere else, not on the basis. The foundational divine principle is being ignored. We are fascinated by subjects and studies that promise to feed our stomachs and make us materially happy and powerful. But the hard truth is the Divine beneath all. People must either know the supreme truth of the One Being behind all becoming or at least know the practical truth of love and brotherhood. These two points are the limits that education must ever keep in mind — the starting point and the goal. (Vidya Vahini, Ch 19)
NOBLE ACTIONS, VIRTUOUS QUALITIES AND SACRED THOUGHTS
ARE THE FOUNDATIONS OF GOOD CHARACTER. - BABA
அனைத்திலும் சக்தி பொதிந்து இருக்கிறது- ஒரு துண்டுக் காகிதத்தில் அது இருக்கிறது, ஒரு துணித் துண்டில் அது இருக்கிறது.உள்ளுறையும் சக்தி தீர்ந்து போனவுடன், மரணம் நிகழ்கிறது; சக்தி நிரம்பும் போது, பிறப்பு ஏற்படுகிறது. சச்சிதானந்தமே சக்தி.;நாம் ( சத்), ஆனந்தமாக ( ஆனந்தம் ) இருக்கிறோம் (சித்). அனைத்தும் சக்தியே; சக்தி இறைவனிடமிருந்தே பெறப்படுகிறது. அதுவே அனைத்து மனிதரின் ஆதார அடிப்படையாகும். நாம், அந்த ஆதாரத்தில் அல்லாது, வேறு எங்கோ மாட மாளிகைகளைக் கட்டிக் கொண்டு இருக்கிறோம்.அடிப்படை ஆதாரமான தெய்வ தத்துவம் உதாசீனப் படுத்தப் படுகிறது. நமது வயிற்றுக்கு உணவளிப்பதாகவும், நம்மை மகிழ்ச்சியாகவும், சக்தி வாய்ந்தவர்களாகவும் ஆக்குவதாக உறுதியளிக்கும் பாடங்கள் மற்றும் ஆய்வுகள் ஆகியவற்றால் நாம் ஈர்க்கப்படுகிறோம். ஆனால்,அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கும் தெய்வீகமே மறுக்க முடியாத சத்தியமாகும். உருவாகியுள்ள அனைத்தின் பின் இருப்பது அந்த தலைசிறந்த ஒரே சத்தியமே என்பதையாவது அல்லது குறைந்த பட்சம் ப்ரேமை மற்றும் சகோதரத்துவத்தின் நடைமுறை சத்தியத்தையாவது மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஆரம்பம் மற்றும் இலக்கு என்ற இந்த இரண்டு வரம்பு முனைகளே கல்வி எப்போதும் மனதில் கொள்ள வேண்டியவையாகும்.
சீரிய செயல்கள், ஒழுக்கமான குணங்கள் மற்றும் புனிதமான சிந்தனைகளே, நற்குண நலன்களின் அஸ்திவாரம் ஆகும் - பாபா