azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 11 Sep 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 11 Sep 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

Desire and pray for the welfare of the entire universe. Develop the sense of unity and banish the feeling of differences. This is true service to the country. You should live in unity and be charged with the feeling that all are your sisters and brothers. Your sense of togetherness ought to exceed even that which is found amongst the members of a family. You all know that when Vivekananda delivered his address in Chicago at the Parliament of Religions on the subject of the wisdom of our ancients, he began with the words, “Brothers and Sisters of America.” The audience was so thrilled to hear this that they gave him a standing ovation. They were so happy to be referred to as brothers and sisters. Today, however, Bharatiyas (Indians) are ashamed to regard others as brothers and sisters. We have to spread such a spirit amongst one and all. Humanness is something that came along with us at birth and not later. The human being and the quality of humanness came into existence at the same time. How is it that we have forgotten such a divine feeling? (Divine Discourse, May 27, 2000)
IF YOU HAVE UNITY, THERE IS NOTHING THAT YOU CANNOT ACHIEVE IN THIS WORLD. - BABA
பிரபஞ்சமனைத்தின் நலனை விரும்பி பிரார்த்தியுங்கள்.ஒற்றுமை உணர்வை வளர்த்துக் கொண்டு,வித்தியாசங்களின் உணர்வுகளை விலக்குங்கள்.இதுவே தேசத்திற்கு ஆற்றும் உண்மையான சேவையாகும், நீங்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து, அனைவரும் உங்களது சகோதர, சகோதரிகள் என்ற உணர்வோடு இருக்க வேண்டும்.ஒரு குடும்பத்தின் அங்கத்தினர்களுக்கு இடையே உள்ளதை விடவே, உங்களது ஒன்றிணைந்து இருப்பதன் உணர்வு அதிகமாக இருக்க வேண்டும். சுவாமி விவேகானந்தர், சிகாகோ நகரில் மதங்களின் பாராளுமன்றத்தில், நமது பண்டைய காலத்தவரின் ஞானத்தைப் பற்றிய அவரது உரையை அளிக்கும் போது, ‘’அமெரிக்காவின் சகோதர, சகோதரிகளே ‘’ என்ற வார்த்தைகளுடன் ஆரம்பித்தார் என்பதை நீங்கள் அறிவீர்கள். இதைக் கேட்ட புளகாங்கிதம் அடைந்த கூட்டத்தினர், அவருக்கு எழுந்து நின்ற ஒரு வரவேற்பினை அளித்தனர். சகோதர, சகோதரிகள் என்று அழைக்கப் பட்டதைக் கண்டு அவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆனால், இன்றோ, பாரதீயர்கள் (இந்தியர்கள்), மற்றவர்களை சகோதர, சகோதரிகளாகக் கருதுவதை அவமானமாகக் கருதுகிறார்கள். நாம் அனைவரிடமும், இப்படிப் பட்ட ஒரு உணர்வைப் பரப்ப வேண்டும். மனிதத் தன்மை என்பது நாம் பிறந்த போதே நம்முடன் கூட வந்த ஒன்றே அன்றி, பின்னர் வந்ததல்ல. மனிதனும், மனிதத்தன்மையும் ஒரே நேரத்தில் தான் தோன்றியவை. இப்படிப் பட்ட ஒரு தெய்வீக உணர்வை எப்படி நாம் மறந்து போனோம்?
உங்களிடம் ஒற்றுமை இருந்தால்,இந்த உலகில்
உங்களால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை- பாபா